சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி: வட மாநிலத்தவர்களிடம் விசாரணை

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, பாச்சல் பகுதி யில் தனியார் கல்லூரி அருகே வங்கியின் ஏ.டி.எம்., செயல்பட்டு வருகிறது. கடந்த, 4 நள்ளிரவு ஏ.டி.எம்., தீப்பிடித்து எரிந்ததுகொண்டிருந்தது. இதனை, அவ்வழியே வந்தவர்கள் பார்த்து ராசிபுரம் தீயணைப்புதுறையினருக்கும் புதுச்சத்திரம் போலீசாருக்கம் தகவல்கொடுத்தனர். அதற்குள், பணம் வைத்திருந்த இயந்திரம் முற்றிலும் எரிந்து நாசமானது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்க தொடங்கினர். அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' காட்சியை பார்த்த போது, இரண்டு பேர் காஸ் வெல்டிங் மிஷினுடன் உள்ளே சென்றதும், அவர்கள் வந்தபிறகுதான், ஏ.டி.எம்., இயந்திரம் எரிவதும் கண்டுபிடிக்கப்பட்டது. அச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மூன்று பேர் இதில் சம்பந்தபட்டிருக்கலாம் என சந்தேகித்தனர். இதன் பேரில், ஹரியானா மாநிலம் சென்று மூன்று பேரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X