பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு நீட்டிப்பு?: 30ம் தேதி மருத்துவக்குழுவுடன் இபிஎஸ் ஆலோசனை

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
coronavirus, covid 19, lockdown, tamil nadu, tn cm, edappadi palanisamy, தமிழகம், ஊரடங்கு_நீட்டிப்பு, மருத்துவக்குழு, முதல்வர், இபிஎஸ், ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஜூலை 31ம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் வரும் 30ம் தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் இபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று (ஜூலை 27) மட்டும் 6,993 பேருக்கு தொற்று உறுதியானது. இந்நிலையில், ஜூலை 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது. இதையடுத்து நாளை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் இபிஎஸ் ஆலோசனை மேற்கொள்கிறார். அதை தொடர்ந்து நாளை மறுநாள் (30ம் தேதி) மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.


latest tamil news



சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலமாக நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொள்கின்றனர். தற்போது தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு ஊரடங்கு தளர்வுகள் குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகே ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து தமிழக அரசு முடிவெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
29-ஜூலை-202006:50:28 IST Report Abuse
Muguntharajan ஏற்கனவே பஸ்கள இயக்கி சென்னையில மட்டுமே இருந்த கொரானாவ தமிழகம் முழுவதும் நல்லா பரப்பியாச்சு. மறுபடியும் பஸ்ச விட்டால் தியேட்டர திறந்தால் மேலும் அதிகமாக பரவும். ஆகையால் கொரானா பரவாமல் தடுக்க மேலும் 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும்.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூலை-202020:44:43 IST Report Abuse
oce குரோனா ஒரு உயிரி வைரஸ். அலை அலையாய் வானில் புரண்டு வூகானிலிருந்து தெற்கு மேற்கு திசைகளில் சஞ்சாரம் செய்கிறது. வடக்கு பக்கம் அவ்வளவாக பரவ வில்லை. எத்தனை லாக் டவுன் போட்டாலும் அது முழுமையாக எப்பொழுது பின் வாங்கும் என்பது அதை ஏவிய சீனனுக்கு தான் தெரியும். அவன் கேட்டாலும் சொல் லமாட்டான். உயிரி செல் அற்ற சாதாரண வைரஸாக இருந்தால் ஆறு ஏழு மாதங்கள் இப்படி நீடிக்காது. குரோனா வைரஸை அது கிளம்பிய இடத்திலிருந்து அழிக்க எவரும் முன் வரவில்லை. வருவதை தடுத்து கொண்டிருந்தால் மக்களின் அன்றாட ரொட்டீன் லைஃப் சிதைந்து போய் விடும். இருந்து கஷ்டப்படுவது சாவை விட மோசமானது.
Rate this:
Cancel
சந்திரன். துறையூர் அரசுக்கு தாழ்மையான வேண்டுகோள். யார் எதை சொன்னாலும் பரவாயில்லை.15 நாட்கள் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்தால் கொரோனா கட்டுக்குள் வந்து விடும்.எந்த தளர்வுகளுமின்றி அறிவித்து பாருங்கள். முக்கியமாக மது பெட்ரோல் பங்க் பஸ். மற்றும் அனைத்து விதமான நிறுவனங்கள்.. சென்னை இருந்த நிலை என்ன இப்போது இருக்கும் நிலை என்ன என்று பாருங்கள்.முடிந்த வரை மக்களாகிய நாமும் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்ந ன் றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X