காஷ்மீர் பிரிவினைவாத தலைவருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது| Pakistan to confer highest civilian award to Syed Ali Geelani | Dinamalar

காஷ்மீர் பிரிவினைவாத தலைவருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (20)
Share

இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரிவினைவாதத் தாலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு, பாகிஸ்தான் அரசு அந்நாட்டின் உயரிய விருதான 'நிஷான் - எ - பாகிஸ்தான்' என்ற விருதை அளித்து கவுரவித்துள்ளது.



latest tamil news




காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கி யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், ஹூரியத் உறுப்பினர்கள் மவுனமாக இருப்பது குறித்து, காஷ்மீர் பிரிவினைவாதத் தாலைவர் சையத் அலி ஷா கிலானி தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு, பாகிஸ்தானின் உயரிய விருதான 'நிஷான் - எ - பாகிஸ்தான்' என்ற விருதை அந்நாட்டு அரசு அளித்துள்ளது.


latest tamil news



'காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து கிட்டத்தட்ட ஓராண்டை நெருங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவை சீண்டுவதற்காக, இந்த விருதை பிரிவினைவாதத் தலைவருக்கு பாகிஸ்தான் வழங்கியுள்ளது. இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு, அரசியல் சட்டப்பிரிவு 370ம் பிரிவை நீக்கிய, ஆக., 5ம் தேதியை கறுப்பு நாளாக அனுசரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை மோசமாகச் சித்தரிப்பதோடு, காஷ்மீர் அரசியல்வாதிகளுக்கு உயரிய இடம் கொடுத்து, இந்தியாவை விமர்சிப்பவர்களை ஆராதிக்கவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது' என, அரசியல் வல்லுநர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X