வீட்டில் இருந்து பணியாற்ற 2021 ஜூன் வரை ஊழியர்களுக்கு அனுமதி: கூகுள் அறிவிப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
கலிபோர்னியா: 'கொரோனா வைரசால், அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை, ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்' என, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்றால், உலகம் முழுவதும் ஐ.டி., உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு தெரிவித்துள்ளன. மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், தனது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும்

கலிபோர்னியா: 'கொரோனா வைரசால், அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை, ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்' என, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.


latest tamil news




கொரோனா தொற்றால், உலகம் முழுவதும் ஐ.டி., உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு தெரிவித்துள்ளன. மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், தனது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் காலக்கெடுவை நீட்டித்துள்ளது.


latest tamil news



இதுகுறித்து, கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தங்களது ஊழியர்களுக்கு இ-மெயிலில் தெரிவித்துள்ளதாவது:கொரோனா வைரசால் பெரும்பாலான நேரம் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்படும் என, ஆரம்பத்திலேயே தெரிவித்தோம். அலுவலகப் பணிகளை வீட்டில் இருந்தே மேற்கொள்வதால் அதற்குரிய பர்னிச்சர் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு உதவியாக, ஊழியர்களுக்கு தலா 1,000 டாலர் (சுமார் ரூ.75 ஆயிரம்) அலவன்ஸ் வழங்கப்பட்டது.



latest tamil news



தற்போது, ஊழியர்கள் தங்களின் வருங்கால இயக்கத்தைத் திட்டமிட்டுக் கொள்ளும் வகையில், உலகளாவிய அளவில் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதியை நீட்டிக்கிறோம். இதன் மூலம் அலுவலகம் வந்து பணியாற்றத் தேவையில்லாத பொறுப்பில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும், அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்.

இதன் மூலம் உலகம் முழுவதும் 2 லட்சம் கூகுள் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பயன்பெறுவர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜூன் வரை, வீட்டில் இருந்து பணியாற்ற தங்களது ஊழியர்களுக்கு கூகுள் அனுமதி வழங்கியிருப்பது போல், மற்ற நிறுவனங்களும் அனுமதி வழங்க ஆலோசித்து வருவதாக, வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X