பொது செய்தி

இந்தியா

நல்ல செய்தி ! மும்பையில் குறைந்தது கொரோனா பாதிப்பு

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Mumbai, Corona Cases, Lowest Count, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, coronavirus count, corona toll, corona India, மும்பை, கொரோனா, பாதிப்பு, குறைவு

மும்பை: மும்பையில் கடந்த 100 நாட்களில் இல்லாத அளவாக குறைவான கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நாள் முதல் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. அங்கு இதுவரை 1,10,182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பல பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 21,812 பேர் சிகிச்சையில் உள்ளனர். மும்பையில் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக தற்போது 68 நாட்கள் ஆகிறது. மேலும் குணமடைபவர்களின் விகிதம் 73 சதவீதமாக உள்ளது.


latest tamil news



கடந்த ஞாயிற்றுக்கிழமையில் மும்பையில் 1,033 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 8,776 பேருக்கு சோதனை செய்ததில் 700 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியானது. இது கடந்த 100 நாட்களில் இல்லாத குறைந்த அளவிலான பாதிப்பு எண்ணிக்கையாகும். மும்பை நகரைப் போன்று தாராவியிலும் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், அங்கும் சில நாட்களாக குறைந்து வருகிறது. அங்கு 24 மணிநேரத்தில் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அமைச்சர் ஆதித்த தாக்கரே தனது டுவிட்டரில், ‛இன்று மும்பையில் வெறும் 700 பாதிப்பு மட்டுமே உள்ளன. அதுவும் மும்பையில் ஒரே நாளில் (8,776) அதிக சோதனை செய்யப்பட்டுள்ளன. 3 மாதங்களுக்கு பிறகு ஒரு பெரிய ஆறுதல் செய்தி,' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
28-ஜூலை-202017:40:06 IST Report Abuse
S. Narayanan கொரோனாவிலிருந்து மக்கள் முற்றிலும் குணமாக வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசிகள் வந்து இனி எந்த வைரஸும் மக்களை தாக்காத நிலை விரைவில் வரதேண்டும். உலக மக்கள் மீண்டும் நிம்மதியாக வாழவேண்டும்.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
28-ஜூலை-202016:39:29 IST Report Abuse
sundarsvpr கொரோனா குறைத்துள்ளது என்ற செய்தி தொடர்ந்து வரவேண்டும் என்று தொற்றுக்கு எதிர்த்து போராடும் எல்லோரும் சார்பாக ஆண்டவனை வேண்டுகிறேன். முற்றிலும் குறைத்து மீண்டும் தொற்றாது என்ற நிலை வேண்டும். சுத்தம் சுகம் தரும் என்பதனை அரசுகள் மக்கள் நினைவில்கொள்ளவேண்டும். இதற்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை அவசியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X