வைரலாகும் விண்வெளியின் சூரியோதய புகைப்படங்கள்

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Sunrise, Space, Captured, NASA, Astronaut, சூரியன், உதயம், விண்வெளி, நாசா

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் நாசா விண்வெளி வீரர் பாப் பெஹன்கென் ,சூரியன் உதயமாகும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த மே மாதம் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் உதவியுடன், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பிய முதல் வணிகரீதியான பால்கான் 9 ராக்கெட் மூலம் விண்வெளி வீரர்களான பாப் பெஹன்கென் மற்றும் டக் ஹர்லி ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் செய்தனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெளியே வந்து மற்ற விண்வெளி வீரர்களுடன், இருவரும் ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு மாதங்கள் ஆய்வு பணியை முடித்த விண்வெளி வீரர்கள் இருவரும் ஆக.,2ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பவுள்ளனர்.


latest tamil news


இந்நிலையில் பூமிக்கு மேலே 400 கி.மீ தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து எடுக்கப்பட்ட நான்கு புகைப்படங்களை, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சூரிய உதயத்தின் முதல் தருணம் என விண்வெளி வீரர் பாப் பெஹன்கென் டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். சிவப்பு நிற புள்ளியில் இருந்து சூரியன் மஞ்சளாக மேலெழும்பி வரும் ஆச்சர்யமான புகைப்படங்கள் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகைப்படத்தை லைக் செய்துள்ளனர்.

அட்லாண்டிக் கருத்துப்படி, சர்வதேச விண்வெளி நிலையம் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் பூமி வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. இதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ,விண்வெளி வீரர்கள் ஒரு சூரிய உதயத்தைக் காண்கிறார்கள். இதுபோன்று ஒரு நாளில் மொத்தம் 16 சூரிய உதயங்களை காண்கிறார்கள் என கூறப்பட்டுள்ளது. இரண்டு விண்வெளி வீரர்களும் விண்வெளியில் இருந்து ஏராளமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஜூலை மாத துவக்கத்தில், பெஹன்கென், விண்வெளியில் இருந்து ஊதா நிறத்தில் மின்னல் வெட்டும் வீடியோ காட்சியை பகிர்ந்திருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூலை-202018:51:48 IST Report Abuse
சுடலை மாடசாமி இந்த புகைப்படங்கள் எங்கு பார்க்க இயலும்?
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
28-ஜூலை-202017:27:19 IST Report Abuse
S. Narayanan ஆச்சர்யமூட்டும் செய்திகள். நேரிடையாக பார்க்க ரசிக்கவேண்டும் காட்சிகள்.பொது மக்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா.
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
28-ஜூலை-202017:20:32 IST Report Abuse
SENTHIL NATHAN மகிழ்ச்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X