எது சரியான முடிவு?: சிதம்பரத்தின் கேள்விகள்

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (58)
Share
Advertisement
Chidambaram, Questioned, PM_Modi, RightDecision, CoronaVirus, Lockdown, சிதம்பரம், பிரதமர், மோடி, கேள்வி, சரியான முடிவு, ஊரடங்கு, கொரோனா, பரவல்

புதுடில்லி: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறிய பிரதமர் மோடிக்கு, காங்., எம்.பி., ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கொரோனா பரவலுக்கு எதிரான போராட்டத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததன் விளைவாகவே நாட்டில் பாதிப்பு குறைவாக உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டு வருகிறார். இந்நிலையில் பிரதமரின் கூற்றை விமர்சிக்கும் வகையில் காங்., எம்பி., ப.சிதம்பரம், பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:


latest tamil news



கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் 'சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தோம்' என்று பிரதமர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். கீழ்க்கண்ட முடிவுகள்
சரியான முடிவுகளா? அவற்றை யார் எடுத்தது?
* நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு - சரியான முடிவா?
* கோடிக்கணக்கான நாள் வேலை பார்ப்பவர்கள், சுய வேலை பார்ப்பவர்கள் திடீரென்று வேலை இழந்தார்களே - சரியான முடிவா?
* புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி, வீட்டை இழந்து பட்டினி கிடந்தார்களே - சரியான முடிவா?
* ரயில் இன்றி, பஸ் இன்றி பல லட்சம் மக்கள், பல நாறு கிலோமீட்டர்கள் நடந்தே சென்று தமது சொந்த ஊர்களை அடைந்தார்களே - சரியான முடிவின் விளைவா?
* பல கோடி குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றனவே - இது சரியான முடிவுகளின் பயனா?
* ஊரடங்கு விதிகளைத் தளர்த்திய பிறகும் வேலையிழந்த கோடிக்கணக்கானவர்கள் இன்னும் வேலையில்லாமல் இருக்கிறார்களே - சரியான முடிவுகளின் பயனா?
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.Rajeswaran - chennai,இந்தியா
29-ஜூலை-202013:49:32 IST Report Abuse
V.Rajeswaran மக்கள் கடந்த இரு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து மோடியை ஆதரித்த முடிவே சிறந்த முடிவு
Rate this:
Cancel
29-ஜூலை-202006:15:22 IST Report Abuse
S.Balakrishnan கேள்வி எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம். ஒரு அவசரகால நெருக்கடியில் இவரைப் போன்ற குதர்க்க வாதிகளுக்கும் கோணல் புத்திக்காரர்களுக்கும் இப்படித்தான் கேள்வி கேட்டு மக்களை பீதியடைய செய்வார்கள். உண்மையான நாட்டு பற்றுடன் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் நிலமையை புரிந்து ஒத்துழைப்பு கொடுத்து பேரிடரிலிருந்து மீள பாடுபடுவார்கள்.
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
28-ஜூலை-202023:18:10 IST Report Abuse
unmaitamil மோடியின் சரியான நடவடிக்கையால்தான் நீயும் உன் குடும்பமும், உன் தலைவி குடும்பமும் இன்றும் உயிரோடு இருக்கிறீர்கள். அந்த நன்றிகூட இல்லாமல் இப்படி பேசுவது சரியல்ல. அறிவாளி டாடா அவர்கள், இன்று உயிருடன் இருந்தாலே பெரிது. மற்றவை பிறகு என்றார். உனக்கு அந்த அளவுக்கு சிந்திக்க தெரியவில்லை என்றால், வாய் மூடி இரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X