மெய்நிகர் கடத்தல்: சீன மாணவர்களுக்கு ஆஸி., போலீசார் எச்சரிக்கை

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
AustralianPolice, Warn, VirtualKidnap, Scam, ChineseStudents, ஆஸ்திரேலியா, போலீஸ், சீன மாணவர்கள், எச்சரிக்கை, மெய்நிகர், கடத்தல்

சிட்னி: சீன மாணவர்களை குறிவைத்து, அவர்களது குடும்பத்தினரிடம் பணம் பறிக்க மெய்நிகர் கடத்தல் மோசடி அரங்கேறி வருவதாக பல்கலைக்கழகங்கள் மற்றும் சீன அதிகாரிகளுக்கு, ஆஸ்திரேலிய போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா விவகாரத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியதில் இருந்து ஆஸ்திரேலியா, சீனா இடையே வர்த்தகம், மனித உரிமைகள் மற்றும் ஹேக்கிங் உள்பட பல்வேறு விவகாரத்தில் இருநாடுகள் இடையேயான உறவு மோசமடைந்துள்ளது. ஆஸி.,வின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள பல்கலைக்கழகங்களில் 2,12,000 வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொரோனா காரணமாக இந்தாண்டு சீன மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில், இந்தாண்டு மட்டும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 8 மாணவர்கள் போலியான மெய்நிகர் கடத்தல் நாடகம் வாயிலாக, வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் இருந்து 3.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை மீட்பு பணமாக மோசடி பேர்வழிகள் பெற்றுள்ளனர்.

மற்றொரு வழக்கில், சிட்னியில் உள்ள 22 வயது சீன மாணவியின் தந்தை, தனது மகள் கடத்தப்பட்டிருப்பதாக வந்த வீடியோவை அடுத்து 1.4 மில்லியன் டாலரை செலுத்தி மீட்டுள்ளார். சீனாவில் உள்ள மற்றொரு குடும்பத்தினர், 22 வயதுள்ள தங்களது உறவினரின் கண்களை கட்டி, பிணையமாக பிடித்து செல்லப்பட்டுள்ளதாக வீசாட் செயலி மூலம் அனுப்பப்பட்ட வீடியோவிற்கு, 14 ஆயிரம் டாலர்களை செலுத்தியுள்ளனர். ஆனால் அவர் ஓட்டல் ஒன்றில் பாதுகாப்பாக இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.


latest tamil news‛கடந்த சில மாதங்களாக மோசடி அரங்கேறி வருகிறது. ஒவ்வொரு வார இறுதியில் இந்த மோசடிகளால் ஒருவர் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் வந்தால், நிராகரியுங்கள். போலீசார் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு அழையுங்கள். ஆனால் எந்த பணத்தையும் செலுத்த வேண்டாம்' என நியூ சவுத் வேல்ஸ் மாநில குற்றப்பிரிவு இயக்குனர் டேரன் பெனட் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் அறிமுகமில்லாத சூழலில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து விலகி வாழும் சீன மாணவர்களை மோசடி பேர்வழிகள் குறிவைக்கின்றனர். சீன அதிகாரிகள் போர்வையில், மாண்டரின் மொழியில் பேசும் மோசடி பேர்வழிகள், சீனாவில் நடந்த ஒரு குற்றத்தில் தொடர்பிருப்பதாக பாதிக்கப்படுவோரின் மொபைல் எண்ணுக்கு அழைக்கிறார்கள். மேலும் சட்ட நடவடிக்கை, கைது அல்லது நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்க கட்டணம் செலுத்த வேண்டுமென கூறுவதாக போலீசார் தெரிவித்தனர்.


latest tamil news


சில மோசடி கும்பல், மாணவர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடனான தொடர்பில் இருந்து விலகுமாறு கட்டாயப்படுத்துகிறது. ஒரு ஓட்டல் அறையை வாடகைக்கு எடுத்து தங்கள் கைகளை தாங்களே கட்டி கொண்டு, கண்களை மூடிக்கொண்டு படங்கள் அல்லது வீடியோ பதிவுகளை எடுக்க வேண்டும். பின்னர் அதனை வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுக்கு அனுப்ப அழுத்தம் கொடுக்கிறார்கள். தங்களது குழந்தைகளை தொடர்பு கொள்ள முடியாத பெற்றோர்கள், மாணவர்களை விடுவிக்க குறிப்பிட்ட தொகையை அளிக்கின்றனர். தொடர்ந்து பணம் செலுத்துமாறு அச்சுறுத்தும் போது, பாதிக்கப்படும் பெற்றோர்கள் போலீசில் புகார் அளிக்கின்றனர். போலீசார் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஓட்டல் அல்லது அவர்களது அறைகளில் பாதுகாப்பாக கண்டுபிடிப்பார்கள் என ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


சமீபகாலமாக உலகம் முழுவதும் மெய்நிகர் கடத்தல் (virtual kidnappings) சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு ஆஸ்திரேலியா முழுவதும் சீன அதிகாரிகள் என 1,172 அழைப்புகள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் எத்தனை போலி கடத்தல் நாடகம் மற்றும் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை. ஆங்கிலம் பேச தெரியாத வெளிநாட்டு மாணவர்களையே அதிகம் குறிவைத்து மோசடி நடப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMKUMAR - MADURAI,இந்தியா
03-ஆக-202008:38:27 IST Report Abuse
RAMKUMAR வினை விதைத்தவன் வினை அறுப்பான் .
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
02-ஆக-202014:34:17 IST Report Abuse
vnatarajan மாணவர்களே பெற்றோர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக நடத்தும் நாடகமா என்னனு ஒன்னும் புரியவில்லையே.
Rate this:
Cancel
kasinathan karthikeyan.k - singapore,சிங்கப்பூர்
01-ஆக-202009:37:24 IST Report Abuse
kasinathan karthikeyan.k சாத்தியமா..............புரியல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X