அலிபாபாவும் 40 திருடர்களும்; பினராயி அரசை விமர்சித்த காங்.,

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
Pinarayi Vijayan, Alibaba, kerala, kerala govt, Congress, பினராயி விஜயன், அரசு, அலிபாபா, 40 திருடர்கள், காங்கிரஸ்

திருவனந்தபுரம்: கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு, அலிபாபாவும் நாற்பது திருடர்களையும் போல செயல்படுவதாக காங்கிரஸ் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது.

கேரளாவில் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரள மாநிலம் இதுவரை இதுபோன்ற மிக மோசமான ஆட்சியையும், ஊழல் மிகுந்த முதல்வரையும் பார்த்ததே இல்லை. உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் பினராயி விஜயன், இதுவரை கண்டிராத ஊழலை செய்துள்ளார். மிக உயர்ந்த ஊதியம் பெறும் உயர் பதவிகளுக்கு பின்கதவு வழியாக பணி நியமனங்களும் நடைபெற்றுள்ளன.


latest tamil news


உடனடியாக பினராயி விஜயன், பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இந்த அரசு கிட்டத்தட்ட அலிபாபாவும் நாற்பது திருடர்களையும் போல் உள்ளது. நாட்டிலேயே கேரள மாநிலம் தற்போது அவமானகரமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. ஒரு முதல்வரின் செயலாளர், மூத்த ஐஏஎஸ் அதிகாரியே, என்ஐஏ சோதனையின் கீழ் உள்ளார் என்றால், எவ்வாறு முதல்வர் தனது பதவியைத் தொடர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
29-ஜூலை-202014:54:38 IST Report Abuse
skv srinivasankrishnaveni இருக்கும்லக்ஷணத்துக்கு தடவிடாலாம் வேப்பண்ணெயை என்று சொல்றாப்போல இருக்கே கான் கிரேஸ் லே அடிக்காதகொள்ளைகளா
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
29-ஜூலை-202012:11:59 IST Report Abuse
RaajaRaja Cholan எங்க ஊர்ல தான் அலி பாபாவும் நாற்பது திருடர்களும் இருக்கிறார்கள் அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா கிரீடத்தை . இப்பொழுது தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சென்று இருக்கிறோம் இன்னும் கொல்லியடிக்க கொள்ளை அடிக்க காத்து கொண்டு இருக்கிறோம், இங்க இருந்து நிதி நிதியை சரி பார்ப்பார் அப்பொழுதுதான் எங்களுக்கு உதயம் ஆரம்பித்தது போல் இன்பமாக இருக்கும்
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
28-ஜூலை-202022:49:16 IST Report Abuse
unmaitamil என்ன பண்றது ??? கேரளாவில் இவனை விட்டா அவன் ?? அவனை விட்டா இவன் ??? மக்கள் திருந்துகிறவரை இவர்கள் வாழ்வார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X