'ஸ்பெயினுக்கு செல்ல வேண்டாம்': ஜெர்மனி வேண்டுகோள்

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

பெர்லின்: ஜெர்மனியில் சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைந்துள்ளது. அதனால், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, கடைகள், பள்ளிகள், விடுதிகள், உணவகங்கள் ஆகியவை படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன.



latest tamil news




இந்நிலையில், ஜெர்மனி அரசின் மருத்துவ நிறுவனமான ராபர்ட் கோச், 'கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு மக்கள் சென்று வந்தால் தொற்று அதிகரிக்கும். குறிப்பாக ஸ்பெயினில் தொற்று அதிகமுள்ளது. அங்கு சென்று வந்தால் ஜெர்மனியிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது' என, எச்சரிக்கை விடுத்துள்ளது.


latest tamil news



இதையடுத்து, ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ஜெர்மனியில் இன்று (28ம் தேதி) 633 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2.07 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 9 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக, கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.


latest tamil news



ஆனால், ஸ்பெயினில் கேட்டலோனியா, அரகான், நவ்அர்ரா ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. ஸ்பெயினில் இதுவரை, 2.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1.50 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனால், சமீப நாட்களாக தினமும் அங்கு புதிதாக, 6,300க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளித்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஜெர்மனி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X