முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப்புக்கு 12 ஆண்டு சிறை

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Najib, Jail Sentence, Malaysia, PM, Malaysia's former PM, fine, முன்னாள் மலேசிய பிரதமர், நஜிப், 12 ஆண்டு சிறை, அபராதம்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்த போது, 2015-ம் ஆண்டு அந்நாட்டின் அரசு முதலீட்டு நிதியான 1 எம்.டி.பி. நிறுவனத்தில் 4,500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார் மலேசியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனைகளின் போது 273 மில்லியன் டாலர் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டிருந்தன. மேலும் அவர் மீது அரசுத்தரப்பு நம்பிக்கை மோசடி, பணமோசடி, அதிகார அத்துமீறல் உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.


latest tamil news


இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த இரு ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 28) தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், நஜிப் ரசாக் மீதான 7 குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதால் அவருக்கு, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கு 12 ஆண்டுகள் மற்றும் அபராதம், மூன்று நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளுக்கு தலா 10 ஆண்டுகள், மூன்று பண மோசடி குற்றச்சாட்டுகளுக்கு தலா 10 ஆண்டுகள் என தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அனைத்து சிறைத் தண்டனையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிபதி நஸ்லான் உத்தரவிட்டார். அதன்படி அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 50 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.374 கோடி) அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்யப் போவதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
29-ஜூலை-202014:49:10 IST Report Abuse
skv srinivasankrishnaveni நம்ம தேசத்தைவிட மெல்ஷிய நாடுக்குட்டிதானே மேலும் முஸ்லிம்கள் அதிகம் அவா ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் தனி நம்மநாட்டுலே இவனெல்லாம் பல லகஷம்கொடிலே செக்குறானோ அவனெல்லாம்தான் vvvvvvvvvvvvvip
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
28-ஜூலை-202019:04:10 IST Report Abuse
Nathan 4,500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுக்கே மலேசிய முன்னாளுக்கு சிறை. இங்க பல லட்சம் கொடிகளை சுரூட்டி வெளிநாடுகளில் சொத்து குவித்துள்ள பல முன்னாள்கள், ஜெயிலுக்கு போவார்களா, பேரன் பேத்திகளுக்கு சொத்து அணுபவிக்க அரசு வசதி பண்ணிக் கொடுக்குமோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X