ஹிந்து கடவுளை அவமதித்து டுவிட்: மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் பிரதமர் மகன்

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
  Israeli PM Benjamin, Netanyahu's ,Son Apologises,  His Tweet Offends Indians

புதுடில்லி: இந்தியர்களின் மனதை புண்படும் வகையில் துர்கா தேவி கடவுளை சமூக வலைதளங்களில் பதிவிட்ட இஸ்ரேல் பிரதமர் மகன் , பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

இஸ்ரேல் பிரதமராக உள்ளவர் பெஞ்சமின் நெத்தன்யாகூ, இவர் பிரதமர் மோடியின் நண்பராக உள்ளார். நெத்தன்யாகூவின் மகன் எய்யர் 29, இவர் சமூக வலைதளங்களில் மிகவும் தீவிரமாக உள்ளார். நெத்தன் யாகூ பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளார். வழக்கு கோர்ட் விசாரணையில் உள்ளது.


latest tamil news
இந்நிலையில் நெத்தன்யாகூவின் பெண் வழக்கறிஞரான லியாட் பென் ஆரியின் முகம் இந்தியர்கள் வணங்கும் துர்கா தேவி முகம் போன்று உள்ளது என துர்கா தேவி படத்தை லியாட் பென் ஆரி முகத்துடன் ஒப்பிட்டு தனது டுவிட்டரில் பதிவேற்றினார்.இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தியாவில் ஹிந்து பெண் கடவுளை அவமதிக்கும் வகையில் இஸ்ரேல் பிரதமரின் மகன் செயல் உள்ளதாக கண்டனம் எழுந்தது. இதையடுத்து தான் அறியாமல் தவறு செய்துவிட்டதாகவும் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறி பதிவை நீக்கினார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
30-ஜூலை-202021:47:46 IST Report Abuse
Nallavan Nallavan அதில் அவமதிப்பு இல்லை ............ விளையாட்டுத்தனமாகச் செயல்பட்டுள்ளார் மகன் ............
Rate this:
Cancel
Mayon - Kajang,மலேஷியா
29-ஜூலை-202007:41:36 IST Report Abuse
Mayon ஒரு பெண்ணை படமாய் வரைந்து அதை தெய்வம் என்றால், அந்த படத்திலுள்ள பெண்ணைப் போல் உருவம் கொண்ட, உயிருடன் உள்ள பெண்ணை வணங்க வேண்டியது முறையல்லவா?. இதற்குப் போய் கண்டனம் தெரிவிப்பதும் பிறகு மன்னிப்பு பெறுவதும் கேவலமாக இல்லையா?.
Rate this:
Cancel
vivek c mani - Mumbai,இந்தியா
28-ஜூலை-202023:22:32 IST Report Abuse
vivek c mani இசுரேல் பிரதமர் நெதன்யாஹு மகன் பண்பு நிறைந்தவர். செய்தது தவறு என்று தெரிந்ததும் உடனே மன்னிப்பு கேட்டார். நம்மூர் 'மேதாவிகள் ' தவறு, பண்பற்றது , பிறருக்கு வருத்தம் தரும் என்று தெரிந்தும் தவறு செய்கிறார்கள். பண்பில்லாதவர்களிடம் பண்பை எதிர்பார்க்கலாமா? மத வியாபாரம் படுத்துவிடுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X