சுசாந்த்சிங் தற்கொலை வழக்கு: காதலி மீது பீஹார் போலீஸ் எப்.ஐ.ஆர்.

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Sushant Singh Rajput, suicide case, FIR, Rhea Chakraborty,  abetment, suicide

மும்பை: தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட் வழக்கில், அவரது காதலி என கூறப்படும் ரேகா சக்கரபர்த்தி மீது பீஹார் போலீசார் எப்.ஐ.ஆர்.பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பை பந்த்ராவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங், 34 தற்கொலை செய்து கொண்டார்.

பாலிவுட்டில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கத்தால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த முடிவு எடுத்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


latest tamil news



சுசாந்த்சிங் தற்கொலை குறித்து மும்பை பந்த்ரா போலீசார் இதுவரை சினிமா பிரபலங்களான சஞ்சய் லீலா பன்சாலி, ஆதித்யா சோப்ரா, சினிமா விமர்சகர் ராஜிவ் மசாந்த் , நடிகை கங்கனா ரணவத், படத்தயாரிப்பாளர் கரன்ஜோஹர், உள்ளிட்ட 40 சினிமா பிரபலங்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். சுசாந்த் சிங் காதலி என கூறப்படும் ரேகா சக்கரபர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுசாந்த் சிங் ராஜ்புட் தந்தை , சுசாந்த்சிங்கின் காதலி ரேகா சக்கரபர்த்தி மீது பீஹார் மாநிலம் பாட்னா போலீசில் புகார் மனு கொடுத்தார். இதையடுத்து போலீசார் ரேகா சக்கரபர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
தற்போது ரேகா சக்கரபர்த்தி, கைது செய்ய பீஹார் மாநிலம் பாட்னா போலீசார் மும்பை விரைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vivek c mani - Mumbai,இந்தியா
28-ஜூலை-202023:34:19 IST Report Abuse
vivek c mani இது தற்கொலையா, தூண்டப்பட்டு செய்து கொண்ட தற்கொலையா அல்லது கொலையா என்பது தெளிவாகவில்லை. மும்பை போலீசார் விசாரணையை ஆரம்பித்தவுடனேயே தற்கொலை என்று கூறியது பல சந்தேகங்களை எழுப்பியது. தற்கொலையா இல்லை கொலையா என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும் . 40 நாட்களுக்கு மேலாகியும் விசாரணை முடியவில்லை. எனவே தற்கொலை செய்து கொண்டார் என்பதை விட , தற்கொலையா என விசாரணை என்பதே சரியாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X