ராமஜென்ம பூமியில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ., சதி; உளவுத்துறை எச்சரிக்கை

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
ISI, terrorist attack, Ayodhya, Ram Janmabhoomi, August 15, terrorist, pak, pakistan, Intelligence alert

புதுடில்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமிடத்தில் பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஆக.,15ம் தேதி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

உ.பி., மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்டுவதற்கு, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு, நவம்பரில் அனுமதியளித்தது. இதையடுத்து, மத்திய அரசு, கோவில் கட்டுவதற்காக, கடந்த பிப்ரவரியில், 'ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா' என்ற பெயரில் அறக்கட்டளையை அமைத்தது. அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை, வரும், 5ம் தேதி நடத்த, அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல்லை நாட்டுகிறார், விழாவில், பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் உட்பட, 200 பேர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, அறக்கட்டளை செய்து வருகிறது. இந்நிலையில், ராமஜென்ம பூமியில், ஆக.,15ம் தேதி, தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., திட்டமிட்டுள்ளதாக 'ரா' எச்சரிக்கை விடுத்துள்ளது.


latest tamil news



இதுகுறித்து உளவு அமைப்பான 'ரா' விடுத்துள்ள எச்சரிக்கையில், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு, ஆப்கனில் பயிற்சி அளித்து வருகிறது. மேலும், இந்தியாவுக்குள் 5 குழுக்களை அனுப்பி, பல இடங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாவும் 'ரா' தெரிவித்துள்ளது.

அதே சமயம், இத்தாக்குதல்கள் அனைத்தும் உள்நாட்டுக் குழுக்கள் நடத்திய தாக்குதல் போல இருக்க ஐ.எஸ்.ஐ., திட்டமிட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து டில்லி, அயோத்தி, காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய இடங்களில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூலை-202022:56:30 IST Report Abuse
Ganesan Madurai ஓவைசி வெயிட்டிங் இதுக்காகத்தானே.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
28-ஜூலை-202022:46:02 IST Report Abuse
தல புராணம் 16 லட்சம் கொரோனா சாவுகளை மறைக்க என்ன செய்தி வேண்டுமானாலும் போடவேண்டியிருக்கும். அதை உண்மையாக்கி காட்ட வேண்டியும் இருக்கும். தேர்தலுக்காக எல்லையில் ராணுவ வீரர்களை பலிகொடுக்க தயங்காத பாஜகவாதிகள், ஓட்டுக்காக அயோத்தியில் ராம தூதர்களை விட்டு வைப்பார்களா என்ன? தடையின்றி கொலை செய்ய தயங்காத பயங்கரவாத கட்சி பாஜக.
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
28-ஜூலை-202022:40:03 IST Report Abuse
unmaitamil அப்படி நடக்காது. காரணம் மோடிஜி ஆட்சி. மண்ணு பொம்மை ஆட்சி அல்ல. அப்படி சிறிதாக ஏதாவது நடந்தால், அதை காரணமாக வைத்து இந்த கூட்டத்தை மொத்தமாக அழித்து விடுவார்கள் என்பது எதிரிகளுக்கு நன்கு தெரியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X