இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு| India's Covid-19 fatality rate falls to 2.25%, recovery rate crosses 64% | Dinamalar

இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020
Share

புதுடில்லி : இந்தியாவில் கொரோனா தொற்றின் இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 64 சதவீதமாக அதிகரித்ததாகவும் மத்திய சுகாதாரதுறை தெரிவித்தது.latest tamil newsஇந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இறப்பு விகதம் படிப்படியாக குறைந்து வருகிறது. உலகில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் இந்தியாவில் குறைவாக உள்ளதாக சில தினங்களுக்கு முன் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்திருந்தார். தற்போது நாட்டின் இறப்பு விகிதம் (CFR) 2.25 சதவீதமாக குறைந்துள்ளதாக இன்று அரசு தெரிவித்தது.


latest tamil newsஇது தொடர்பாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டதாவது : பாதிப்புகளை குறைக்க வீடு வீடாக நடத்தப்படும் கண்காணிப்பு, மக்கள் தொடர்பான கணக்கெடுப்பு, ஆக்கிரமிப்பு சோதனை மற்றும் முழுமையான தரநிலை பராமரிப்பு, அணுகுமுறையின் அடிப்படையிலான மருத்துவ சோதனைகள், தொற்று பரிசோதனை, சிறந்த கட்டுப்பாடு அமைப்பு மற்றும் வீட்டு தனிமைப் படுத்துதல் போன்ற பல்வேறு காரணிகளை திறம்பட செயல்படுத்துவதன் மூலமாகவும் இறப்பு விகிதம் குறைந்து , தொற்றில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது 64 சதவீதமாக உயர்ந்து வருகிறது. மத்திய அரசின் சிறந்த வழிகாட்டுதலின் கீழ், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், கடுமையான பாதிப்புகளை திறம்பட நிர்வகிப்பதனாலும்சுகாதார பணியாளர்களால் பாதிப்பு அதிகமான நபரை பராமரிப்பதன் மூலமாகவும், நாடு முழுவதும் (CFR -Case Fertility Rate) குறைவதற்கான வழியாகும்.


latest tamil newsகொரோனா தொற்று பாதிப்பு முன்பு 3.33 சதவீதத்தில் இருந்து 2.25 சதவீதமாக குறைந்துள்ளது. அத்துடன் மூன்றடுக்கு மருத்துவமனை மற்றும் அதன் கட்டமைப்பு, மருத்துவர்களின் சிறந்த சிகிச்சை, நோயாளிகளின் ஒத்துழைப்பும் மீட்பு விகிதம் உயர்வதற்காண காரணியாகும். தொடர்ச்சியாக 5 வது நாளாக, இந்தியா ஒரு நாளைக்கு 30,000 க்கும் மேற்பட்ட தொற்று மீட்டெடுப்புகளைக் கண்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாதிப்புகளின் திறமையான மேலாண்மை மற்றும் டில்லியின் எய்ம்ஸ் நிபுணர் குழுக்களால் , ஆரம்பகால பாதிப்புகளை கண்டறிதல், தனிமைப்படுத்துதல் குறித்த அரசின் கவனம் தொடர்ச்சியான முடிவுகளை கொண்டுள்ளன. இது கொரோனா மீட்பு விகிதத்தை மேம்படுத்துகிறது.

கொரோனா மீட்பு விகிதம் ஜூன் மத்தியில் 53 சதவீதமாக இருந்தது. நேற்று நிலவரங்களுடன் ஒப்பிடுகையில் 64 சதவீதமாக அதிகரித்தது. கடந்த 24 மணிநேரத்தில் 35,176 பேர் குணமடைந்தனர். நாட்டின் மொத்த மீட்டெடுப்புகள் 9,52,743 ஆக உயர்ந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X