புதுடில்லி: அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை விழாவிற்கு ஒருசில நாட்களுக்கு முன்னதாக ராம ஜென்ம பூமி இயக்க வரலாறு புத்தகம் வெளியிடப்பட உள்ளது.

இது குறித்து ஆர்.எஸ்.எஸ். வி.எச்.பி இயக்க தலைவர்கள் கூறி இருப்பதாவது: அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமிபூஜை வரும் 5ம் தேதி துவங்க உள்ளது. அதற்கு முன்னதாக ஆக.,1 -ம் தேதி ராம ஜென்ம பூமி இயக்க வரலாறு புத்தகம் வெளியிடப்படுகிறது.
ராம ஜென்ம பூமி இயக்கத்தின் வரலாறு குறித்த புத்தகத்தை ஆர்.எஸ்.எஸ் ஐ.டி.,பிரிவின் தலைமை நிர்வாகியான அருண் ஆனந்த் மற்றும் சமூகவியலில் பட்டம் பெற்றுள்ள வினய் நல்வா ஆகியோர் எழுதி உள்ளனர். ராமர் பிறந்ததில் இருந்து ராமர் கோகயிலின் புனரமைப்பு வரை அயோத்தியின் முழுமையான வரலாற்றை கொண்ட முதல் புத்தகம் இது என கூறினர்.

புத்தகம் குறித்து அருண் ஆனந்த் கூறுகையில் கோயிலை நிர்மானிப்பதற்கான 500 ஆண்டுகால போராட்டங்களை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 1528 ம் ஆண்டுவரையில் அயோத்திக்கு வந்துள்ள வெளிநாட்டு பயணிகள் குறித்தும், 1528 ம் ஆண்டிற்கு பின்னர் ராமர் கோவில்இடிக்கப்பட்டது என்ற உண்மையை புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என கூறினார்.
அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமிபூஜை வரும் 5ம் தேதி துவங்க உள்ளது. இந்தவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE