பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் இன்று 296 பேர் 'டிஸ்சார்ஜ்'

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று, 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; அதேவேளையில், 296 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.



latest tamil news




கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் 200க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. இதனால், பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 4,000ஐ தொட்டுள்ளது. அதேவேளையில், தொற்றிலிருந்து மீள்வோரின் சதவீதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் இன்று 273 பேருக்கு தொற்று உறுதியானதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,052 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 64 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news



கோவையில், நேற்று முன்தினம் 103 பேர் குணமடைந்தனர். நேற்று, 202 பேர் குணமடைந்த நிலையில் இன்று, 296 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, 2,407 பேர் குணமடைந்துள்ளனர். கோவையில் தினமும் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், பாதிப்பிலிருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவது மக்களிடையே நம்பிக்கையை விதைத்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X