பொது செய்தி

இந்தியா

ரபேல் நாளை இந்தியா வருகை: அம்பாலா அருகே 144 தடை

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Section 144, imposed, Ambala airbase, Rafale, Rafale fighter jet, Chandigarh,

சண்டிகர்: ரபேல் விமானம் நாளை(ஜூலை 29) இந்தியா வருவதையொட்டி, தரையிறங்க உள்ள அம்பாலா விமான நிலையத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் ஒப்படைத்துள்ள, ஐந்து, 'ரபேல்' போர் விமானங்கள், பிரான்சில் இருந்து புறப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் மொத்தம், 7,000 கி.மீ., துாரத்தை கடந்து, நாளை இந்தியா வந்து சேருகின்றன. நடு வானிலேயே எரிபொருளை நிரப்புவதற்காக, பிரான்ஸ் விமானமும் உடன் வருகிறது. வழியில், மேற்காசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள பிரான்ஸ் விமானப்படை தளத்தில் மட்டும் நிறுத்தப்பட்டன.


latest tamil newsஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில், ரபேல் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு, இந்த விமானங்கள், நம் படையுடன் இணைய உள்ளன. இந்நிலையில், ரபேல் விமானம் நாளை தரையிறங்குவதையொட்டி, அம்பாலா விமான நிலையத்தை சுற்றி, 4 கிராமங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையம் தரையிறங்கும் போது, போட்டோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 கி.மீ., சுற்றியுள்ள பகுதிகளில் டுரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
28-ஜூலை-202022:07:44 IST Report Abuse
வல்வில் ஓரி ராக்கூழ் எங்க போனார்?
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஜூலை-202021:03:21 IST Report Abuse
Janarthanan வேணும் என்றால் பாருங்க சைனீஸ் பப்பு இந்த பெருமை மிக்க நிகழ்வை திசை திருப்ப நாளைக்கு ஏதாவது உதவாக்கரை வீடியோ வெளியிடுவான் ??? குடும்ப அடிமைகள் எல்லாம் அதை தூக்கிகிட்டு அலையும்
Rate this:
kamaraj jawahar - CA,யூ.எஸ்.ஏ
28-ஜூலை-202022:24:54 IST Report Abuse
kamaraj jawahar5 vimanatthai vaithu kondu rombathan altathengada...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X