அசாம் சபாநாயகருக்கு கொரோனா: டிரைவருக்கு பாதிப்பு| Dinamalar

அசாம் சபாநாயகருக்கு கொரோனா: டிரைவருக்கு பாதிப்பு

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020
Share
கவுகாத்தி: அசாம் சட்டசபை சபாநாயகர் அமினுல் ஹக் லஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அசாம் பா.ஜ. எம்.எல்.ஏ.வும் சட்டசபை சபாநாயகருமான அமினுல் ஹக் தனது முகநூலில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளதாவது, நேற்று எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.தற்போது என்னை
 Assam Assembly, Deputy Speaker ,Tests Positive ,Coronavirus

கவுகாத்தி: அசாம் சட்டசபை சபாநாயகர் அமினுல் ஹக் லஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசாம் பா.ஜ. எம்.எல்.ஏ.வும் சட்டசபை சபாநாயகருமான அமினுல் ஹக் தனது முகநூலில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளதாவது, நேற்று எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


latest tamil news



தற்போது என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு முகநூலில் அமினுல் ஹக் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை அமினுல் ஹக்கின் கார் டிரைவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X