பொது செய்தி

இந்தியா

தெலுங்கானாவின் முக்கிய திட்டங்களுக்கு கை கொடுத்தது பருவமழை

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஐதராபாத் : தெலுங்கானாவில் பெய்த பருவமழை மாநிலத்தின் பல்வேறு முக்கிய திட்டங்களை செய்து முடிப்பதற்கான சிறந்த காரணியாக உள்ளதாகவும், கடந்த ஆண்டை விட இம்முறை நீரின் வரத்து இரட்டிப்பாகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தெலுங்கானா தொடர்ந்து விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக அதற்கான சிறந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில அரசின்

ஐதராபாத் : தெலுங்கானாவில் பெய்த பருவமழை மாநிலத்தின் பல்வேறு முக்கிய திட்டங்களை செய்து முடிப்பதற்கான சிறந்த காரணியாக உள்ளதாகவும், கடந்த ஆண்டை விட இம்முறை நீரின் வரத்து இரட்டிப்பாகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.latest tamil newsதெலுங்கானா தொடர்ந்து விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக அதற்கான சிறந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில அரசின் முயற்சிகளுக்கு ஏற்ப பருவமழை உள்ளிட்ட பல்வேறு வளங்களும் சிறப்பாக உள்ளன. இதனால் விவசாய மாநிலமாக தெலுங்கானா முன்னேறி வருகிறது. தற்போது நடக்கும் வானகலம் பருவத்தில் முதன் முறையாக மாநிலத்தின் அனைத்து முக்கிய திட்டங்களும் ஏராளமான வரத்துகளை பெற்றுள்ளன. திட்டங்களுக்கான தண்ணீரையும் சேகரிக்கிறது.

இவற்றில் முக்கியமான நற்செய்தி என்னவென்றால், கடந்த ஆண்டை விட இம்முறை 2 மடங்கு நீரானது நீர்த்தேக்கங்களில் அதிகரித்துள்ளது. கிருஷ்ணா, கோதாவரி ஆறுகள் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் அவற்றின் துணை நதிகளில் 13 திட்டங்களில் ஒட்டுமொத்தமாக நீர் கிடைப்பது 367.01 டி.எம்.சி ஆகவும், கடந்த ஆண்டு இதே நாளில் 178.43 டி.எம்.சி ஆகவும் உள்ளது.


latest tamil newsஇதற்கிடையில் கர்நாடகாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பிரியதர்ஷின ஜூவாலா திட்டம் (PJP) உயர்ந்துள்ளது. நேற்று நிலவரப்படி, கர்நாடகாவின் நாராயண்பூரிலிருந்து நீர் வெளியேற்றத்தால் இங்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. மேலும் நேற்று நீர்மட்டத்தின் கொள்ளளவு 318.300 மீட்டராக (இதன் மொத்த கொள்ளளவு 318.516 மீ) இருந்தது. 2019 ன் 1.96 TMC உடன் ஒப்பிடுகையில் தற்போது 9.40 TMC ஆக உள்ளது. ஸ்ரீசைலம் நீர்த் தேக்கத்தில் நீர்மட்டம் 853.80 அடியாக (முழு கொள்ளளவு 885 அடி) உள்ளது. தற்போது 2019 ல் 31.22 டி.எம்.சியுடன் ஒப்பிடும்போது 88.88 டி.எம்.சி.யைக் கொண்டுள்ளது.

நாகார்ஜுனா சாகர் திட்டத்திலும், நீரின் வரத்து அதிகரித்து, FRL 590 அடிக்கு எதிராக 541 ஆக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை 190.42 TMC ஆக உள்ளது. தொடர்ந்து கோதாவரி மற்றும் அதன் துணை நதிகளில் உள்ள திட்டங்கள் சிங்கூருடன் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன. அதன் மொத்த கொள்ளளவான 1,717.93 அடியில், 1,672.90 அடிக்கு நீர் உள்ளது. இது 2019 ல் 0.44 டிஎம்சியாகவும், 2020 ல் 0.68 டிஎம்சியாகவும் உள்ளது. அத்தடன் நிஜாம் சாகர், ஸ்ரீராம் சாகர், மிட் மனேர் மற்றும் லோயர் மனேர் நீர்த்தேக்கங்கள் (அணைகளிலும்) நீர்வரத்து உயர்ந்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
29-ஜூலை-202011:23:28 IST Report Abuse
Bhaskaran இந்தியாவின் பெரிய நெற்களஞ்சியமாக தெலுங்கானா உருவாகிறது
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
29-ஜூலை-202004:37:34 IST Report Abuse
B.s. Pillai The central government should follow the foot steps of Telengana and make plans to store maximum water during rainy season to irrigat max land and also stop wastage of water by flooding and damaging the crops and creating hardships to the poor during rainy season. The best is to interconnect all major rivers and convert India self sufficient in food production and food storage and food processing. This will increase our export of food products through out the world. India can be the answer for removing hunger deaths in the whole world.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X