பொது செய்தி

இந்தியா

மஹா.,வில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
Maharashtra, Covid19, Corona Virus

மும்பை: மஹா.,வில் இன்று(ஜூலை 28) ஒரே நாளில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டனர்.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(ஜூலை 28) மட்டும் 7,717 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 3,91,440 ஆக அதிகரித்தது.


latest tamil news



இன்று மட்டும் 282 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி, 14,165 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணி நேரத்தில், 10,333 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டதையடுத்து, இதுவரை குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2,32,277 ஆக உயர்ந்தது. குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,44,694 ஆக குறைந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X