ரஷ்யாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மேலும் 8,888 பேர் மீட்பு

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

மாஸ்கோ : ரஷ்யாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 8,888 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ரஷ்யாவில் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் புதின் அரசும் பல்வேறு முக்கிய கட்ட நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான நாடுகளில் ரஷ்யா தற்போது 4 வது இடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ரஷ்யாவில் மாஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் பரிசோதனை தொடர்ந்து அதிகமாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5,395 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,23,515 ஆக அதிகரித்தது.


latest tamil news



நாட்டில் நோய் பாதிப்புக்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 150 பேர் பலியாகினர், நாட்டில் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 13,504 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஒரே நாளில் ரஷ்யாவில் நோய் பாதிப்புகளில் இருந்து 8,888 பேர் மீட்கப்பட்டனர். தற்போது நாட்டில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 6,12,217 ஆக உயர்ந்தது. மேலும் 2,61,000 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X