பொது செய்தி

இந்தியா

3 மாநிலங்களில் குறைந்த கொரோனா; இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 50,000க்கும் கீழ் வந்தது

Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட 3 மாநிலங்களில், இன்றைய பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், இந்திய அளவிலான பாதிப்பு எண்ணிக்கை 50,000-க்கு கீழ் குறைந்துள்ளது.



latest tamil news



டில்லியில் நேற்றைய பாதிப்பை விட இன்று 40 சதவீத கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது, இதே போல், ஆந்திராவில் 20 சதவீதம், மஹா.,வில் 16 சதவீத பாதிப்பு குறைந்துள்ளது. டில்லி, ஆந்திரா மற்றும் மஹா., ஆகிய 3 மாநிலங்கள் முறையே நேற்று(ஜூலை 27) 1,073 பேர், 7,627 பேர் மற்றும் 9,431 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்தது. இந்நிலையில், அதே மாநிலங்களில் இன்று(ஜூலை 28) முறையே 613 பேர், 6,051 பேர் மற்றும் 7,924 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகி உள்ளது.


latest tamil news



இதனால் இன்று இந்திய அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,703 ஆக உள்ளது. கடந்த ஒரு வார காலமாக இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது, 50,000க்கும் அதிகமாகவே இருந்த நிலையில், இன்று 50,000-க்கு கீழ் குறைந்துள்ளது.

கடந்த ஜூன் 18ம் தேதி, இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3.33 ஆக இருந்த நிலையில், தற்போது அது 2.25 விகிதமாக குறைந்துள்ளது. கடந்த 5 நாட்களாக, இந்தியாவில் தினமும் 30,000க்கும் அதிகமானோர் குணமடைந்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DHANASEKARAN - chennai,இந்தியா
29-ஜூலை-202013:39:31 IST Report Abuse
DHANASEKARAN இப்படியே ஏமாத்துங்க மக்களை......அது ஞாயிற்று கிழமை எடுத்த ரிஸல்ட்ஸ் அதனால கம்மியா தான் வரும் ஏனென்றால் பிலால் லாஃடவுன்லே டெஸ்ட் எடுக்க கூட யாரும் வரமாட்டாங்க
Rate this:
Cancel
jay - toronto,கனடா
29-ஜூலை-202008:59:18 IST Report Abuse
jay நி நிச்சயம் அன்னிய மதத்தவனா இருக்கனும் அதான் இபாடி பொய் சொல்லுகிறாய்
Rate this:
Cancel
Rajan - Alloliya,இந்தியா
28-ஜூலை-202022:59:37 IST Report Abuse
Rajan முதல்வர்களும், பிரதமரும் தூங்குகிறார்கள், தொற்று வேகமா பரவுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X