சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

அமைச்சரே இப்படி பேசலாமா?

Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 அமைச்சரே இப்படி பேசலாமா?

கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஸ்ரீராமுலு தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து, விவாதப் பொருளாக மாறியுள்ளது. முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட, பா.ஜ., தலைவர்கள், தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஸ்ரீராமுலு, கர்நாடகாவில் உள்ள செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவர்; அதை வெளியில் அவர் காட்டிக் கொள்வது இல்லை. பொது இடமாக இருந்தாலும், பொது நிகழ்ச்சியாக இருந்தாலும், எப்போதுமே அடக்கித் தான் வாசிப்பார். ஆனால், சமீபத்தில் சர்ச்சையான ஒரு கருத்தை தெரிவித்து, வம்பில் மாட்டியுள்ளார்.

'கொரோனா பாதிப்பை எப்படி கட்டுப்படுத்துவது' என, சுகாதார அமைச்சர் என்ற முறையில், அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், 'அதெல்லாம் எனக்கு தெரியாது. நம்மை கடவுள் தான் காப்பற்ற வேண்டும்' என்றார்.

அவர், யதார்த்தமாக கூறினாலும், 'சுகாதார அமைச்சரே, பொறுப்பில்லாமல் இப்படி பேசினால், மக்கள் நம்பிக்கை இழந்து விட மாட்டார்களா' என, எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். ஸ்ரீராமுலுவை போனில் அழைத்த எடியூரப்பா, 'ஒரு விஷயத்தை பொது வெளியில் பேசுவதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து பேசுங்கள்' என, அறிவுரை கூறியுள்ளார்.

ஸ்ரீராமுலு தரப்போ, 'கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், கடவுள் காப்பாற்ற வேண்டும் என, அவர் கூறியதில் என்ன தவறு உள்ளது...' என, வாதிடுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
29-ஜூலை-202004:42:30 IST Report Abuse
NicoleThomson எல்லாம் கையி மீறி போய் விட்டது என்று சொல்லாமல் சொல்லுறாரோ? அப்புறம் எதுக்கு நீங்க என்று கேக்க ஒரு ஊடகமும் இல்லையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X