சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

வினை விதைத்தோர் வினை அறுப்பர்!

Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
வினை விதைத்தோர் வினை அறுப்பர்!

எஸ்.ராமகிருஷ்ணன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கருப்பர் கூட்டம்' என, அடையாளப்படுத்திக் கொள்ளும், ஹிந்து எதிர்ப்பு வெறியாளர்களின், 'வீடியோ' பதிவின் தாக்கம், மக்களிடையே பெரிய அளவில் கிளர்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஹிந்து நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தி எழுதியும், பேசியும் வந்த, தி.க., மற்றும் தி.மு.க.,வின் செயல்பாடுகளை, இதுவரையில், ஹிந்துக்கள் சகிப்புத் தன்மையுடன் கடந்து சென்றனர்; தற்போது, இந்நிலை மாறி வருகிறது. ஹிந்து மீது அவதுாறு பரப்புவோரின் முகமூடிகள், உடனடியாக கிழித்தெறியப்படுகின்றன.

தி.க., தலைவர், வீரமணி, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் போன்ற அரசியல்வாதிகளும்; விஜய் சேதுபதி, ஜோதிகா போன்ற கலைத் துறையினரும், ஹிந்துக்களை மட்டுமே தாக்கி பேசி வருகின்றனர். அந்த கருத்துகளுக்கு பதிலடி மட்டுமின்றி, அவர்களின் முகமூடியையும், இப்போது ஹிந்துக்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

ஹிந்துக்களுக்கு எதிராக, அவதுாறாக பேசுவோர் யார், அவர்களின் பின்புலம் என்ன, அவர்களுக்கு சொத்து குவிந்தது எப்படி என, பல்வேறு ரகசியங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.என்ன செய்தாலும், பேசினாலும், ஹிந்துக்களுக்கு எதிர்ப்பு காட்டத் தெரியாது என்ற தைரியத்தில், அவர்கள் ஆட்டம் போட்டனர். எதிர் கருத்துகளுக்கு, ஹிந்துக்கள் பதிலடி தரத் துவங்கி விட்டனர். தேர்தலிலும், தங்கள் எதிர்ப்பை, அழுத்தமாக பதிவு செய்து வருகின்றனர்.

இதன் எதிரொலியாகத் தான், 'ஹிந்து என்றால் திருடன்' எனப் பேசிய, கருணாநிதியின் மகன், ஸ்டாலின் இப்போது, 'தி.மு.க., ஹிந்துக்களின் எதிரியல்ல' என, அறிக்கை விடுத்துள்ளார். ஆனால், தி.மு.க., வளர்ந்த கதை, தமிழர்கள் அனைவருக்கும் தெரியும்!

ஹிந்து துவேஷம், பிராமணர் எதிர்ப்பு, மொழி அரசியலை துாண்டுவது என, திராவிட கழகங்கள் செய்தவை அனைத்தும், சுயநலம் தான்.'தமிழ், சிறுபான்மை, ஜாதி' என, ஏதாவது பிரச்னையை ஏற்படுத்தி, தமிழர்களை துாண்டி விட்டு, குளிர் காய்ந்தது, இனி நடக்காது; மக்கள், விழித்துக் கொண்டுள்ளனர்.

50 ஆண்டுகளுக்கு முன், பயன்படுத்திய வார்த்தை ஜாலங்கள், இனியும் எடுபடாது.உப்பைத் தின்றவன், தண்ணீர் குடித்தே தீர வேண்டும். தி.மு.க., கடந்த, 50 ஆண்டுகளாக, தமிழகத்தில் விதைத்த வினையை, இனி அறுவடை செய்தே ஆக வேண்டும்.

***


தி.மு.க.,வை தடை செய்யணும்!


கே.சீனுவாசன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து, 'கருப்பர் கூட்டம்' என்ற கும்பல் வெளியிட்ட, 'யு டியூப் - வீடியோ' பதிவு, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியது. இது தொடர்பாக, கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அரசு நடவடிக்கை தீவிரமாகி உள்ளது.

இதையடுத்து, 'எந்த மதத்தின் மீதும், தி.மு.க.,விற்கு வெறுப்பு கிடையாது; 'ஹிந்து விரோதிகள்' என, முத்திரை குத்த பார்க்கின்றனர்' என, அக்கட்சியின் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க., வளர்ந்த கதை, நம்மை விட, ஸ்டாலினுக்கு நன்கு தெரியும். அப்படியிருக்கையில், தி.மு.க., ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என, கூறலாமா?

கருப்பர் கூட்டம் குழுவைச் சேர்ந்த, செந்தில்வாசன் என்பவர், தி.மு.க., தகவல் தொடர்பு பிரிவு நிர்வாகி என்பது, போலீஸ் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறதே... அதை, 'இல்லை' என, மறுப்பு தெரிவிக்க போகிறாரா?

கருப்பர் கூட்டம் மட்டுமின்றி, ஹிந்துக்களுக்கு எதிராக அவதுாறு பரப்புவோரின் பின்புலத்தில், தி.மு.க., தான் இருக்கிறது என்பது, எல்லாருக்கும் தெரியும்.மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில், நீண்ட காலமாக செயல்பட்டு வரும், தி.மு.க., கட்சியை, தடை செய்ய வேண்டும்.

***


சிலைகளை பாதுகாப்போம்!


அ.அப்பர் சுந்தரம், மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சிலை என்றாலே, அது வழிபடுவதற்கும், போற்றப்படுவதற்குமான ஒன்றாகவே கருதப்படுகிறது.சிலைகளின் வழியாகத் தான், கடவுளை வணங்குகிறோம். நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவும் உழைத்த, மறைந்த தலைவர்களை நினைவு கூரும் வகையில், பல்வேறு இடங்களில், சிலைகள் அமைக்கப்படுகின்றன.

'வேற்றுமையில் ஒற்றுமை' எனும் தாரக மந்திரத்தோடு, நம் தேசம், உலக அரங்கில் போற்றப்படுவதற்கு, தலைவர்களின் வழிகாட்டுதலே காரணம்.சிலைகளை அவமதிக்கும் செயல், தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வருவது, கண்டிக்கத்தக்கது. ஹிந்து கடவுள்களையும், ஆன்மிக சான்றோரையும் அவமதிக்கும் கலாசாரத்தை, திராவிட கழகம் துவக்கியதில் இருந்தே, இந்த அநாகரிகப் போக்கு தொடர்கிறது.

மேலும், நாட்டிற்கு உழைத்த தலைவர்களை, ஜாதி ரீதியாக பிரிக்க துவங்கியதில் இருந்தே, சிலைகள் அவமதிப்பு நடக்கிறது.சிலரின் சுயநலத்தாலும், சிறுபிள்ளைத்தனமான செயலாலும், நாட்டுக்கு உழைத்த தலைவர்களின் புகழ், குறுகிய வட்டத்திற்கு அடைக்கப்படுகிறது.

தலைவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், அவரின் புகழை, மக்கள் பேச வேண்டும்; ஆனால், அன்றைய நாட்களில், கலவரம் ஏற்படுமோ என, மக்கள் பீதியில் இருப்பது, வேதனையான விஷயம். தலைவர்களின் சிலை அவமானப்படுத்துவது தொடருமேயானால், அனைத்து சிலைகளையும் அகற்ற வேண்டிய சூழல் உருவாகும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், போற்றிப் புகழ வேண்டிய தலைவர்களை, நம் சந்ததி மறந்து விடுவர் என்பது நிச்சயம்.

தலைவர்களின் சிலையை பார்க்கும் போது, அவர்கள் ஆற்றிய தொண்டுகள், மக்களின் நினைவுக்கு வரும்; அவர்களைப் போல நாமும், இந்நாட்டிற்கு தொண்டு புரிய வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். அதற்காகத் தான், சிலைகளை நாம் போற்றி, பாதுகாக்க வேண்டும்.சிலைகளை அவமானப்படுத்துவோரை, மதங்களை அநாகரிகமாக விமர்சிப்போரை, அரசும், சட்டமும், கடுமையாக தண்டிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
29-ஜூலை-202016:49:59 IST Report Abuse
Sathyanarayanan Subramanian இந்துக்கள் விழிப்புணர்வு மகிழ்ச்சி அடைகிறேன். தீமுக திக போன்ற இந்து விரோதி கட்சிகள் தேர்தல் ஆணையம் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்
Rate this:
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
29-ஜூலை-202012:40:04 IST Report Abuse
மூல பத்திரம் சபாஷ், இந்த தகவல்கள் சந்தோஷத்தை தருகிறது
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
29-ஜூலை-202004:40:34 IST Report Abuse
NicoleThomson திமுக இவ்ளோ பண்ணினாலும் பெரும்பான்மை பொதுமக்கள் என்னவோ நாளை கழிப்பதில் தான் சுகம் என்றுள்ளனரோ? வேறேதாவது செய்ய முனைந்தால் காவல்துறையை வைத்து கேசு போடுவாங்க இன்றைய அரசு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X