சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார்: மருத்துவ இடஒதுக்கீடு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு மேல் முறையீடு செய்யாமல், மூன்று மாதங்களுக்குள் சட்டப்படியான தீர்வை காணும் என நம்புகிறோம்.

'டவுட்' தனபாலு: நீங்கள் நம்பினால் மட்டும் போதுமா; மத்திய அரசுக்கு நம்பிக்கை வர வேண்டாமா... சமீபகாலமாக, பா.ஜ., மற்றும் மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அமைச்சர்கள் சிலர் வெளிப்படையாக பேசி வரும் நிலையில், இந்த விவகாரத்தில், மத்திய அரசு, தமிழக அரசுக்கு, 'ஆப்பு' வைக்குமோ என்ற, 'டவுட்' நடுநிலையாளர்களுக்கு வந்துள்ளது!

***

பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்தத் திட்டமும் வரக்கூடாது என, ஒரு கூட்டம் செயல்படுகிறது. குமரி துறைமுகத் திட்டத்தை தொடங்கி இருந்தால், திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், புதிய தொழிற்சாலைகள் உருவாகி பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்.

'டவுட்' தனபாலு: சட்டசபை தேர்தல் விரைவில் வரவுள்ளது என்பதால் தான், 'ஒரு கூட்டம்' என மறைமுகமாக சாடுகிறீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது. தமிழகத்தை சுடுகாடாக மாற்ற வேண்டும் என, திட்டமிட்டு போராட்டங்கள் நடத்திய, தி.மு.க., தலைமையிலான எதிர்க்கட்சிகள் என்று தான் நீங்கள் சொல்லி இருக்க வேண்டும். அமுக்கி வாசிப்பதை பார்த்தால், தேர்தல் தான் காரணமோ என்ற, 'டவுட்' வலுவாகிறது!

***

தி.மு.க., தலைமையிலான கூட்டணி கட்சிகள் தீர்மானம்: சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய தமிழக காவல் துறை, தன் பொறுப்பை நிறைவேற்றத் தவறி, விலகிச் செல்கிறது என, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறது. இந்தப் போக்கை காவல் துறை கைவிட்டு, நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

'டவுட்' தனபாலு: எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கூட்டி, முக்கியமான தீர்மானம் எதையாவது எடுப்பீர்கள் என பார்த்தால், அனைத்து கட்சிகளும் எடுத்து சாப்பிட்டு, ஏப்பம் விட்ட, சாத்தான்குளம் விவகாரத்தை கண்டித்து, தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்களே; மாதக்கணக்கில் எதிர்மறையாகவே சிந்திப்பதால், நல்ல, 'பாயின்ட்' எதுவும் கிடைக்கவில்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
29-ஜூலை-202006:21:18 IST Report Abuse
D.Ambujavalli இந்த சிறு சிறு எதிர்ப்பெல்லாம் வெறும் ஊடல் தான் ரெயிட் பிரம்மாஸ்திரத்தை எடுத்தால் நிபந்தனையற்ற சரணாகதிதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X