சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

'டம்மி' ஆக்கப்படும் ஊராட்சி தலைவர்கள்!

Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'டம்மி' ஆக்கப்படும் ஊராட்சி தலைவர்கள்!

''அமைச்சர் பிடியில இருந்து மாவட்டம் தப்பிடுச்சுன்னு சொல்றாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.''எந்த அமைச்சரை சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''வேலுார் மாவட்டத்துல இருந்து, போன வருஷம் திருப்பத்துார், ராணிப்பேட்டை மாவட்டங்களை புதுசா உருவாக்குனாங்களே... புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகளை உடனுக்குடன் நியமிச்சாங்க பா...

''ஆனா, அ.தி.மு.க., வுல மட்டும், வேலுார் மேற்கு மாவட்டச் செயலரா, வணிகவரி துறை அமைச்சர் வீரமணியும், கிழக்கு மாவட்டச் செயலரா, எம்.எல்.ஏ., ரவியும் இருந்தாங்க... இப்ப தான், புது மாவட்டங்களுக்கு செயலர்களை நியமிச்சிருக்காங்க பா...

''இதுல, திருப்பத்துார் மாவட்டச் செயலரா, அமைச்சர் வீரமணியை நியமிச்சிருக்காங்க... இதுவரை அமைச்சர் வசமிருந்த வேலுார், காட்பாடி, கே.வி. குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு ஆகிய தொகுதிகள், அவரது அதிகாரத்தை விட்டு போயிடுச்சு பா...

''அமைச்சர் பிடியில இருந்து வேலுார் மாவட்டம் தப்பிடுச்சு... 'அவரால நியமிக்கப்பட்ட பழைய நிர்வாகிகளை நீக்கிட்டு, புதியவங்களை நியமிச்சா தான், சட்டசபை தேர்தல்ல ஜெயிக்க முடியும்'னு, வேலுார் மாவட்ட கட்சியினர் சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''கந்த சஷ்டி விவகாரத்துல, ஆளாளுக்கு வக்காலத்து வாங்கறா பார்த்தேளா...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தின, 'கருப்பர் கூட்டம்' கோஷ்டிக்கு, நடிகர் ரஜினி கண்டனம் தெரிவிச்சு, 'கந்தனுக்கு அரோகரா'ன்னு, 'டுவிட்' போட்டாரோல்லியோ...''அ.தி.மு.க., கட்சி பத்திரிகையில, 'மாண்புமிகு அம்மாவும், மதச்சார்பற்ற ஆன்மிகமும்' என்ற தலைப்புல, முன்னாள் எம்.பி., மைத்ரேயன் கட்டுரை எழுதினார்...

''தி.மு.க.,வும், தன் கட்சி பத்திரிகையில, நாங்க ஹிந்துக்களுக்கு எதிரானவா இல்லைன்னு சப்பை கட்டு கட்டினா ஓய்...''வி.சி., திருமாவளவனும், சமூக வலைதளங்கள்ல, பதிவுகளை வெளியிட்டிருந்தார்... அடுத்த வருஷம் சட்டசபை தேர்தல் வர இருக்கறதால, ஹிந்துக்கள் ஓட்டுகள், கையை விட்டு போயிடப்டாதுன்னு, எல்லா கட்சிகளும், இந்த விஷயத்துல வரிஞ்சு கட்டிண்டு வரது ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''பஞ்சாயத்து தலைவர்களை டம்மியாக்கிட்டு இருக்காவ வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''எங்கங்க...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''ஊராட்சிகள்ல, குடிநீர், சாலை உட்பட பல திட்டங்களுக்கு, மத்திய அரசும், மாநில அரசும் நிதி ஒதுக்கீடு செஞ்சிருக்கு... ஆனா, ஊராட்சி தலைவர்கள் கவனத்துக்கே வராம, ஒன்றிய அளவுல, 'பேக்கேஜ் டெண்டர்' விட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை குடுத்துடுதாவ வே...

''அதுலயும், ஆளுங்கட்சி ஆசி பெற்றவங்களுக்கு மட்டுமே டெண்டர்களை குடுக்காவ... இதனால, பஞ்சாயத்து தலைவர்களின் அதிகாரம் பறிக்கப்படுறதா, மதுரை மாவட்டத்துல இருக்கிற ஊராட்சி தலைவர்கள், அப்பப்ப போராட்டத்துல ஈடுபடுதாவ வே...

''இது சம்பந்தமா, மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்களும் குடுத்திருக்காவ... ஆனா, 'இதுல நாங்க என்ன பண்ண முடியும்... அரசு தான் முடிவு செய்யணும்'னு அதிகாரிகள் கையை பிசையுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

பேச்சு முடியவும், பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aaaaa - Bbbbbb,இந்தியா
29-ஜூலை-202009:01:56 IST Report Abuse
Aaaaa கருத்து தெரிவிப்பதால் இவர்கள் திருந்திவிடப்போவதில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X