நவீன மருத்துவ உபகரணங்கள் இந்தியாவுக்கு வழங்கியது இஸ்ரேல்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

ஜெருசலேம் : இந்தியா செய்த உதவிக்கு பதிலுதவியாக, மேற்காசிய நாடான இஸ்ரேலில் இருந்து, அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன், நிபுணர் குழுவினர், நேற்று முன் தினம், இந்தியா வந்தடைந்தனர்.

'கொரோனா' சிகிச்சைக்கு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் கொடுத்து உதவுமாறு, இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நேதன்யாஹு, நம் பிரதமர் நரேந்திர மோடியிடம், வேண்டுகோள் விடுத்தார்.இதை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் 'ஹைட்ராக்சிக்குளோரோக்வின்' உள்ளிட்ட ஐந்து டன் மருந்துகளை, கடந்த ஏப்ரல் மாதம், இஸ்ரேல் அனுப்பி வைத்தது. இந்நிலையில், கொரோனா தொற்றை, சில நிமிடங்களில் கண்டறியும், 'ரேபிட்' பரிசோதனை கருவியை உருவாக்கும் பணியில், இந்திய -- இஸ்ரேல் நிபுணர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

'இதன் கடைசி கட்ட சோதனைகளை மேற்கொள்ள, இஸ்ரேல் நிபுணர்கள், இந்தியா வர உள்ளனர்' என, அந்நாட்டு அரசு சமீபத்தில் தெரிவித்தது. அந்த வகையில், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த, 20 நிபுணர்கள், நேற்று முன் தினம், டில்லி வந்தடைந்தனர்.அவர்களுடன், அதிநவீன மருத்துவ உபகரணங்களை, இஸ்ரேல் அரசு, நம் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. சரியான நேரத்தில், மத்திய அரசு செய்த உதவிக்கு, பதிலுதவியாக, மருத்துவ உபகரணங்களை இஸ்ரேல் அனுப்பியுள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து, இஸ்ரேல் வெளியுறவுத் துறை அதிகாரி, கிலாட் கோஹன், கூறியதாவது:இந்திய அரசின் உதவிக்கு, நன்றி தெரிவிக்கும் விதமாக, அதிநவீன, 'வென்டிலேட்டர்' உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை, இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.இந்த நெருக்கடியான சூழ்நிலையை, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ளும் நல்வாய்ப்பாக, இந்தியா மாற்றியுள்ளது. இதன் வாயிலாக, இருநாட்டு நல்லுறவு வலுவடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், சர்வதேச அளவில், சக்தி வாய்ந்த நாடாக, இந்தியா உருவெடுத்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

நேதன்யாஹு மகன்ஹிந்துக்களிடம் மன்னிப்புஇஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நேதன்யாஹுவின் மகன், யாஹிர், 29. இவர், தன் சமூக வலைதள பக்கத்தில், சமீபத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். அதில், ஹிந்து கடவுளான துர்கையை, மோசமாக சித்தரித்து, 'கிராபிக்ஸ்' செய்யப்பட்டு இருந்தது. இதற்கு, இந்தியர்கள் தரப்பில் இருந்து, கடும் கண்டனங்கள் எழுந்தன.இதையடுத்து, அந்த படத்தை நீக்கிய யாஹிர், 'அரசியல் கேலி சித்திரம் என்பதால், அதை பகிர்ந்தேன். இந்திய நண்பர்களை புண்படுத்தும் நோக்கத்தில் செய்யவில்லை. என் செயலுக்காக வருந்துகிறேன்' என, குறிப்பிட்டுள்ளார்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X