அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ரேஷன் பொருள் கடத்தும் நிலை தற்போது இல்லை' ; அமைச்சர், காமராஜ்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

தி.நகர் : ''தமிழகத்தில், ரேஷன் பொருட்கள் கடத்தல் என்ற நிலை தற்போது இல்லை,'' என, உணவுத்துறை அமைச்சர், காமராஜ் கூறினார்.

சென்னை, பாண்டி பஜார் பகுதியில் நடந்த கொரோனா தடுப்பு மருத்துவ முகாமை பார்வையிட்ட, அவர் கூறியதாவது:சென்னை மாநகராட்சி சார்பில், கொரோனா தடுப்பு பணிகள், செம்மையாக நடப்பதால், கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கோடம்பாக்கம் மண்டலத்தில், 80 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர்.அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 15 முதல் 20 நாட்களுக்குள், தொற்று பாதிக்கப்பட்டுள்ளதா என, பரிசோதனை நடத்தப்படுகிறது.

புதிதாக ரேஷன் கார்டுக்கு பதிவு செய்துள்ளோருக்கும், பொருட்கள் வழங்க வேண்டும் என, முதல்வர் அறிவுறுத்தினார்.அதன்படி, புதிதாக விண்ணப்பிக்கப்பட்ட, 71 ஆயிரம் குடும்பங்களுக்கு, ரேஷன் கார்டு இல்லாமல், பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 'ஒரே நாடு; ஒரே ரேஷன்' திட்டம், அக்., 1 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கு, ஒரு மாதத்திற்கு முன், 'பயோமெட்ரிக்' முறை நடைமுறைக்கு வரும். இந்த பயோமெட்ரிக் முறையால், கொரோனா தொற்று ஏற்படாது. இந்த நடைமுறை தற்போது, திருச்சியில் துவக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், ரேஷன் பொருட்கள் கடத்தல், ஒரு காலத்தில் அதிகமாக இருந்தது. அதை தடுக்க, கடுமையான தண்டனைகள், அபராதங்கள் விதிக்கப்பட்டன.அதனால், ரேஷன் பொருட்கள் கடத்தல் என்பதே, தமிழகத்தில் இல்லை.இவ்வாறு, காமராஜ் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X