அரசியல் செய்தி

தமிழ்நாடு

இட ஒதுக்கீடு வழங்க கோரி பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்

Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 இட ஒதுக்கீடு வழங்க கோரி பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை : 'மருத்துவ கல்வியில், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.


தடை இல்லைஅவரது கடிதத்தின் விபரம்:மருத்துவ கல்வியில், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு, 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில், அன்புமணி மற்றும் சில கட்சிகளை சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்தனர். 'அகில இந்திய தொகுப்பில், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. 'அதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்க, தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், நான்கு ஆண்டுகளில் மட்டும், 11 ஆயிரம் மாணவர்கள், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் பயிலும் வாய்ப்புகளை இழந்து விட்டனர். சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அகில இந்திய தொகுப்பு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு, உடனே இட ஒதுக்கீடு வழங்க, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.உத்தரவுஅதற்கு வசதியாக, தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர், இந்திய மருத்துவ குழுவின் செயலர், இந்திய பல் மருத்துவ குழுவின் செயலர்கள் கூட்டத்தை, தலைமை செயலர் வாயிலாக நடத்தி, உரிய முடிவுகளை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
29-ஜூலை-202009:40:56 IST Report Abuse
Darmavan இந்த பிச்சை எதனை நூற்றாண்டுகளுக்கு வேண்டும் என்று ராமதாஸ் கேட்கிறான். அப்புறம் என்ன சட்டத்தின் முன் சமம்.வெட்கக்கேடு ஜாதி வெறியை வளர்க்கும் செயல்.
Rate this:
மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஜூலை-202015:41:46 IST Report Abuse
மனிதன்vasathiyatravargalukkaagathan intha ida othikeede thavira summa time paasukku illa atha purinchukko...
Rate this:
Cancel
Lakshmipathi S - Bangalore,இந்தியா
29-ஜூலை-202008:51:34 IST Report Abuse
Lakshmipathi S கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவர் காலைப்பிடித்து MBC பிரிவில் இடஒதுக்கீடு பெற்று ராமதாஸ் தனது ஜாதி மக்களுக்கு உதவினார்.இடஒதுக்கீடுமுறை காரணமாக திறமையானவர்கள் டாக்டராக வரவில்லை. இந்த முறையை மருத்துவதுறையில் தொடர்வது நல்லதல்ல.
Rate this:
ganapthy subramanian - San Francisco ,யூ.எஸ்.ஏ
29-ஜூலை-202010:14:01 IST Report Abuse
ganapthy subramanianApt reply by a good man. What has Dr. Ramadoss and Dr. Anbumani (who became a Doctor not out of NEET) have done justice to their profession. Money spent by Government and time spent in the College have gone to waste....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X