நேபாள கம்யூ., நிலை குழு கூட்டம் ஒத்திவைப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

காத்மாண்டு : நேபாளத்தில், பிரதமர் சர்மா ஒலியின் பதவி தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணமுடியாமல், ஆளும் கம்யூ., கட்சியின் நிலைக் குழு கூட்டம், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

நேபாளத்தில், 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற ஒப்பந்தப்படி, பிரதமர் மற்றும் ஆளும் கம்யூ., கட்சி தலைவர் என, இரு பதவிகளை வகிக்கும், கே.பி.சர்மா ஒலி, ஏதாவது ஒரு பதவியை, முன்னாள் பிரதமர், புஷ்ப கமல் பிரசண்டாவுக்கு விட்டுத் தர வேண்டும். ஆனால், சர்மா ஒலி பதவியை விட்டுத் தர மறுத்து வருகிறார்.இது தொடர்பாக முடிவெடுக்க, கடந்த, இரு மாதங்களில், ஏழு முறை, கம்யூ., கட்சியின் நிலைக் குழு கூட்டம் கூடியது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

கடந்த வாரம், நடைபெற்ற கூட்டத்தை, சர்மா ஒலி புறக்கணித்தார். இதைத் தொடர்ந்து, நேற்று, மீண்டும் நிலைக் குழு கூட்டம் கூடியது. அப்போது, குழு உறுப்பினர், கணேஷ் ஷா, ''சர்மா ஒலி மற்றும் பிரசண்டா ஆகியோரிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து, தீர்வு காண அவகாசம் தேவைப்படுவதால், கூட்டம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது,'' என அறிவித்தார்.இந்த விபரத்தை, பிரதமரின் ஆலோசகர், சூரிய தாபா, 'பேஸ்புக்' வலைதளத்தில் வெளியிட்டார். சமீப காலமாக, சர்மா ஒலி, இந்தியாவுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வருகிறார். இந்தியாவின் மூன்று பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து, புதிய வரைபடத்தை வெளியிட்டார்.

இந்நிலையில், புஷ்ப கமல் பிரசண்டா நிலைக் குழு கூட்டத்தை தன்னிச்சையாக நடத்த முடிவு எடுத்துள்ளார். இது, பிரசண்டா, சர்மா ஒலி இடையே பிளவை அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X