அரசியல் செய்தி

தமிழ்நாடு

மா.செ.,களுடன் நாளை ஸ்டாலின் ஆலோசனை

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 மா.செ.,களுடன் நாளை ஸ்டாலின் ஆலோசனை

- மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு தொடர்பாக, மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுடன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நாளை ஆலோசனை நடத்துகிறார்.'

மருத்துவ கல்வியில், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு, இட ஒதுக்கீடு உரிமை உண்டு' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு கிடைப்பதற்கு, தி.மு.க., தொடுத்த வழக்கு தான் முக்கிய காரணம் என்பதை, பொது மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும் என, தி.மு.க., விரும்புகிறது.மேலும், இந்த உத்தரவை அமல்படுத்துமாறு, பிரதமர் மோடிக்கு, தி.மு.க., - எம்.பி.,க்கள் அழுத்தம் தரவும், இவ்விவகாரத்தில், அடுத்தகட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்தும் விவாதிக்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின், நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'தி.மு.க., மாவட்ட செயலர்கள் மற்றும் எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நாளை மாலை, ௪:௩௦ மணிக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெறவுள்ளது' என, கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X