சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

சிவப்பு பிடிக்காதாம் அமைச்சருக்கு!

Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 சிவப்பு பிடிக்காதாம் அமைச்சருக்கு!

ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, கொங்கர்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கறவை மாடு வளர்ப்புக்கான கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்தது.பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் பங்கேற்றதால், கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில், தடபுடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கட்டடத்தின் சுற்றுச்சுவரில், சங்க தலைவர் தங்கவேல் என்பவரின் பெயர் மட்டும், சிவப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்ட, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'யாருய்யா அது... அமைச்சருக்கு சிவப்பு கலர் பிடிக்காது... சீக்கிரம் அழிங்க...' என, உத்தரவிட்டார். உள்ளூர் கட்சியினர், அதை அழிக்க, 'பெயின்டரை'த் தேடிச் சென்றனர்.

இதைப் பார்த்த நிருபர் ஒருவர், 'நல்ல வேளை, ரத்தம் நம்ம உடம்புக்குள்ள ஓடுது... அந்த நிறம் வெளியே தெரிஞ்சா என்னாவுறது...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
29-ஜூலை-202006:23:49 IST Report Abuse
D.Ambujavalli காவிக்கட்சியிடம் நட்பாக இருக்கலாம், சிகப்பினால் என்ன லாபம் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X