'43 % இந்தியர்கள் மன அழுத்தத்தால் பாதிப்பு': ஆய்வில் தகவல்

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
இந்தியாவில் கொரோனா பாதிப்பு துவங்கியதில் இருந்து அமல்படுத்த ஊரடங்கை தொடர்ந்து 43 சதவீத இந்தியர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்மார்ட்-டெக் சுகாதார தடுப்பு தளமான GOQii நிறுவனம், 10,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் புதிய இயல்பை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்காக ஆய்வு நடத்தியது. புதிய ஆய்வின்படி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு துவங்கியதில் இருந்து அமல்படுத்த ஊரடங்கை தொடர்ந்து 43 சதவீத இந்தியர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.latest tamil newsஸ்மார்ட்-டெக் சுகாதார தடுப்பு தளமான GOQii நிறுவனம், 10,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் புதிய இயல்பை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்காக ஆய்வு நடத்தியது. புதிய ஆய்வின்படி, பதிலளித்தவர்களில் 26 சதவீதம் பேர் லேசான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், 11 சதவீதம் பேர் மிதமான மன அழுத்தத்தையும், ஆறு சதவீதம் பேர் மன அழுத்தத்தின் கடுமையான அறிகுறிகளை எதிர்கொள்கின்றனர்.'கடந்த ஐந்து மாதங்கள் எதிர்பாராதவை. இந்த சூழ்நிலை மக்களின் மன ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ச்சியான ஊரடங்கு, பதற்றம், வேலையிழப்பு, சுகாதார பயம் மற்றும் ஒட்டுமொத்த நிலையின்மை சூழலால், மன அழுத்தம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதிகளவு மன அழுத்தம் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். தற்போதைய ஊரடங்கு மற்றும் வாழ்க்கை முறை வெகுவாக மாறி வருவதால், 43 சதவீத இந்தியர்கள் தற்போது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதை சமாளிப்பது குறித்து கற்று கொண்டிருக்கின்றனர்' என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil newsஆய்வில் பங்கேற்றவர்களின் மனச்சோர்வின் தீவிரத்தை கண்காணித்ததில், இந்த ஆய்வு கேள்வி பதில் அடிப்படையில் நடத்தப்பட்டது. இது நபரின் ஆர்வம், பசி, தூக்க சுழற்சிகள், கவனம் செலுத்தும் திறன் மற்றும் ஆற்றல் அளவுகள் உள்ளிட்ட அன்றாட வழக்கத்தின் ஒன்பது அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொண்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு விளைவாக, நாடு முழுவதும் அதிகரித்து வரும் மனநலப் பிரச்சினைகளை மக்கள் கையாண்டு வருவதை ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

மன சோர்வால் பாதிக்கப்பட்டோர் விஷயங்களைச் செய்வதில் குறைந்த ஆர்வம் , நம்பிக்கையற்ற உணர்வு, ஒழுங்கற்ற தூக்க சுழற்சிகளைக் கையாளுதல், மோசமான உணவுப் பழக்கம், குறைந்த அளவு ஆற்றல், குறைந்த சுயமரியாதை, கவனம் செலுத்துவதில் சிக்கல், அமைதியற்றவர்களாவும் மற்றும் தங்களுக்கே தீங்கு விளைவிக்கும் எண்ணங்களுடன் இருப்பதாக தெரிவித்தனர். 59 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள், இக்காலக்கட்டத்தில் வேலையை செய்வதில் சிறிதும் மகிழ்ச்சியடையவில்லை என்று கூறியுள்ளனர். அவர்களில் 38 சதவீதம் பேர் சில நாட்களில் இந்த உணர்வைக் கொண்டுள்ளனர்.

9 சதவீதம் பேர் பாதிக்கும் மேற்பட்ட நாட்களை உணர்கிறார்கள். இந்த காலங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 12 சதவீதம் பேர் இதை உணர்ந்துள்ளனர். வாழ்க்கை முறையின் மாற்றத்துடன், ஏறத்தாழ பாதி மக்கள் தங்கள் தூக்கத்தில் சிக்கலை எதிர்கொள்கின்றனர் என்றும், மக்கள்தொகையில் குறைந்தது 7 சதவீதத்தினர் கிட்டத்தட்ட இதனை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கின்றனர். அதே நேரத்தில் 33 சதவிகிதத்தினர் ஒரு சில நாட்களில் அதை அனுபவிக்கின்றனர் எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜூலை-202007:33:55 IST Report Abuse
ஆப்பு இந்தியாவில் ஏழைகள், அரிசி கார்டுதாரர்கள் பாடு தேவலை. மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு வங்கியிலும், ரொக்கமாகவும் பணம் குடுக்கின்றன. ரேஷனில் அரிசி, பருப்பு, இலவச கேஸ்னு கிடைக்குது. இவிங்க மன அழுத்தம் இல்லாம நிம்மதியா இருக்காங்க. கொரோனாவால் முடக்கப்பட்டு வேலை போன நடுத்தர மக்கள் பாடுதான் திண்டாட்டம்.
Rate this:
Cancel
28-ஜூலை-202023:58:13 IST Report Abuse
Gopi Kupparao Gopi Kupparao
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X