பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று பாதித்தவர்களிடம் மனித நேயம் காட்டலாமே! 

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பஸ் ஸ்டாப் அருகேயுள்ள குடியிருப்பில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நேற்று காலை, பாதித்தவரை அழைத்து செல்ல, அப்பகுதிக்கு மருத்துவக்குழுவினர், மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் சென்றனர்.இதனை வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள், நின்று வேடிக்கை பார்க்க துவங்கினர். அப்போது, அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு சளிபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை, ஒருவர் தனது மொபைல் போனில், போட்டோ எடுத்தார்.இதைப்பார்த்த மாநகராட்சி மருத்துவ குழு ஊழியர், 'என்ன நடக்குது. எதுக்காக நாங்க உயிரை காப்பாத்துகிற வேலை பார்த்துட்டு இருக்கிறோம் என கொஞ்சமாவது புரிந்து கொள்ளுங்கள். அந்தப்பக்கம் போங்க,' என, அவரை அப்புறப்படுத்தினர்.கொரோனா தொற்று பாதித்தவரை அழைத்து செல்லும் போது, பல்வேறு இடையூறுகளுக்கு நோய் தடுப்பு குழுவினர் ஆளாகின்றனர்.கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குழுவினர் கூறுகையில், 'நோய் தொற்று பாதிப்பை விட, அதனை வீடியோ எடுப்பவர்களின் செயல் கொடூரமானது.நமக்கு வருவதற்கு எத்தனை நேரமாகும் என்பதை உணர வேண்டும். இப்போது, எதைப்பார்த்தாலும், மொபைல் போனில் படம் பிடிப்பது பெருகி விட்டது. அனைவரையும் மனித நேயத்துடன் பாருங்கள்,' என்று ஆதங்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X