பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுப்பாட்டு பகுதியில் மருத்துவ முகாம்: சுகாதார துறையினர் மும்முரம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

திருப்பூர்:கொரோனா நோய் தொற்றால், தடை செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பலரும், திருப்பூர் மற்றும் கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எஸ்.வி., காலனி, காந்தி நகர் - ஏ.வி.பி.லே அவுட், கோழிப்பண்ணை, சந்திராபுரம், அனுப்பர்பாளையம், மண்ணரை, பாளையக்காடு உள்ளிட்ட நோய் தொற்று கண்டறியப்பட்ட 15க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.இப்பகுதிகளில், மாநகராட்சி சுகாதார பிரிவினர் மருத்துவ முகாம்கள் நடத்தி வருகின்றனர்.தடை செய்த பகுதிகளில் வசிப்போர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். சளி, காய்ச்சல், ஆக்சிஜன் அளவு கண்டறியப்பட்டு, வைட்டமின் மாத்திரையும் வழங்கப்படுகிறது.நோய் தொற்று பரவல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது. தொற்று பாதிப்பு சந்தேகப்படும் நபர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.நேற்று, ஏ.வி.பி., லே அவுட் பகுதியில் நடந்த மருத்துவ முகாமை கலெக்டர் விஜயகார்த்திகேயன், நகர் நல அலுவலர் பூபதி, உதவி கமிஷனர் வாசுகுமார் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X