சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'அதுபோல, முஸ்லிம் மதத்தை சாடிய நபர் மீதும், குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சரியான நடவடிக்கையை, தமிழக அரசு எடுத்துள்ளது...' என, பாராட்டத் தோன்றும் வகையில், தமிழக, பா.ஜ., தலைவர் முருகன் அறிக்கை: கந்த சஷ்டி கவசத்தை அவதுாறாக சித்தரித்த நபர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறேன்.

***

'இதற்கு ஏன், போலீஸ் அதிகாரி வேலையை ராஜினாமா செய்தீர்கள்; அதிலிருந்தபடியே, இப்படி செய்யலாமே...' என, நெத்தியடியாக கேட்கத் துாண்டும் வகையில், அண்ணாமலை ஐ.பி.எஸ்., பேட்டி: நான் வலதுசாரியோ, இடதுசாரியோ கிடையாது. எது சரியோ அந்த பாதையில் செல்ல விரும்புகிறேன். உண்மையில், உடனடியாக தேர்தல் அரசியலுக்கு வரும் எண்ணம் ஏதும் இல்லை. இப்போது நான் வேர்களில் வேலை செய்கிறேன். அடிமட்டத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறேன்.

***

'இப்போது, வேல் வரையப்பட்டவுடன், எழுதியவர் கைது செய்யப்படுவது போல, கோவிலுக்கு முன், ஈ.வெ.ரா., சிலையை வைத்த போது, எதிர்த்து, போராட்டம் நடத்தியிருந்தால் அகற்றப்பட்டிருக்குமே...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா அறிக்கை: கோவில்கள் முன், ஈ.வெ.ரா., சிலைகள் இருக்கலாம். முஸ்லிம்களின் மதரசாவிற்கு எதிரில், சாலையில் வேல் வரைந்து, 'வெற்றிவேல் வீரவேல்' என்று எழுதினால் கைது செய்யப்படுகின்றனர். தமிழக காவல் துறை எல்லை மீறுகிறது. இது, ஹிந்துக்களுக்கு சவால்.

***

'கம்யூனிசம், சோஷலிசம் போன்றவை எல்லாம், கரைந்து விட்ட கொள்கைகள்...' என, சொல்லத் துாண்டும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலர் ராஜா அறிக்கை: மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, அரசியல் அமைப்புச் சட்டம் இருக்கும் இடத்தில், மனு தர்மத்தை இருக்கச் செய்ய விரும்புகிறது. நம் இந்தியாவை, மக்களுக்கானதாக மாற்ற வேண்டும் என்றால், சோஷலிசம் மட்டுமே தீர்வு.

***

'எல்லா கட்சித் தலைவர்களும், நுனிப்புல் மேய்ந்து, பல நாட்கள் ஆகி விட்டன. அந்த, 82 பக்க வரைவு அறிக்கையை, முழுமையாக படித்த பின், அறிக்கை அளிக்கிறீர்களோ...' என, கிண்டலாக கேட்கத் துாண்டும் வகையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை: இயற் கை வளத்திற்கும், விவசாயத்திற்கும் பேராபத்தாகவும், பெருமுதலாளிகளுக்கு சாதகமாகவும் இருக்கும், சுற்றுச்சூழல் தாக்க பகுப்பாய்வு அறிக்கையை, மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X