சி.பி.ஐ., அதிகாரி 'டிரான்ஸ்பர்' விசாரிக்க கோர்ட் மறுப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

புதுடில்லி : மத்திய புலனாய்வு அமைப்பான, சி.பி.ஐ., யின் முன்னாள் சிறப்பு இயக்குனர், ராகேஷ் அஸ்தானா தொடர்பான ஊழல் வழக்கை விசாரித்து வந்த, டி.எஸ்.பி., பாசி, 'டிரான்ஸ்பர்' செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்து, அவருடைய மனுவை தள்ளுபடி செய்தது.

சி.பி.ஐ.,யின் இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம், மற்றவர் மீது, ஊழல் புகார்களை தெரிவித்தனர். பிரச்னை தீவிரமடைந்ததால், கடந்தாண்டு ஜனவரியில், அலோக் வர்மா, பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இந்த நிலையில், அஸ்தானா குறித்த ஊழல் புகார்களை விசாரித்த, டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த, ஏ.கே. பாசி, டில்லியில் இருந்து, அந்தமானுக்கு மாற்றப்பட்டார். அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா பரஸ்பரம் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த நிலையில், பணியிட மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து, பாசியும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ. பாப்டே அடங்கிய அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியதாவது:பணியிட மாற்றம் உத்தரவை எதிர்த்து, தகுந்த அமைப்பில் முறையிட்டிருக்க வேண்டும். நீங்கள் ஏன், அந்தமானில் பொறுப்பேற்க வில்லை. பணியிட மாற்றம் உத்தரவை எதிர்த்து முறையிடலாம் என்றுதான், உச்ச நீதிமன்றம் கூறியது. வேறு எந்த சட்ட பாதுகாப்பையும் நாங்கள் அளிக்கவில்லை. நீங்கள் உடனடியாக பணியில் சேர்ந்திருக்க வேண்டும். இந்த மனு மீது, எந்த உத்தரவையும் அளிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, அமர்வு கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X