தொற்று பாதித்தோர் முகவரி குழப்பம்: சுகாதார துறையினர் அலைக்கழிப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

அவிநாசி:தொற்று பாதிக்கப்பட்டோர் பட்டியலில், முகவரி குழப்பம் இருப்பதால், சுகாதார துறையினர் அலைக்கழிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்வோரின் விவரம், தினசரி வெளியிடப்படுகிறது. அதன் அடிப்படையில், பாதித்தவர்களை, மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது, அவர்களது குடியிருப்பு பகுதியை சுற்றி, உள்ளாட்சி நிர்வாகத்தினர் மூலம், கிருமிநாசினி தெளிக்க வைப்பது போன்ற பணிகளில், சுகாதாரதுறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.சமீப நாட்களாக, தொற்று பாதித்தோர் பட்டியலில் சில குழப்பம் ஏற்படுகிறது. நேற்று முன்தினம், திருப்பூர் மாவட்ட அளவில் வெளியிடப்பட்ட பட்டியலில், அவிநாசி அருகே தேவம்பாளையம் பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க நபருக்கு தொற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனடிப்படையில், சுகாதார துறையினர் நடத்திய ஆய்வில், பட்டியலில் இருந்த முகவரி தவறானது என்பதும், அந்த இடத்தில் அத்தகைய நபர் இல்லை என்பதும் தெரியவந்தது. இதேபோன்று, தொற்றுபாதித்தவர் தொடர்பான பட்டியலில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன.சுகாதார துறையினர் கூறுகையில், 'சில நாட்களாக, தினசரி ஏராளமானோருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வுக்கூடத்தில் இருந்து வெளியாகும் பட்டியலில் இத்தகைய குழப்பம் ஏன் வருகிறது என்பது தெரியவில்லை,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X