ஸ்வப்னா, சந்தீப்பிடம் 5 நாள் விசாரிக்க சுங்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கொச்சி : கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள, ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை, ஐந்து நாட்கள், சுங்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயருக்கு, மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து வந்த பார்சலில், 30 கிலோ தங்கம், சமீபத்தில் கடத்தி வரப்பட்டது.இந்த வழக்கில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்னாள் ஊழியர், சரித் குமார் என்பவரை, சுங்கத்துறை அதிகாரிகள், கடந்த, 5ம் தேதி கைது செய்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூரு தப்பி சென்ற, ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர், கடந்த, 11ல் கைதாகினர். இவர்களை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள், காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை முடிவடைந்து, கடந்த 24ல், என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.இதையடுத்து, ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை, சுங்கத்துறை அதிகாரிகள், கைது செய்தனர். இருவரையும், காவலில் எடுத்து விசாரிக்க, பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை, ஐந்து நாட்கள், காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்தது.இந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய, மற்றொரு குற்றவாளியான, கே.டி.ரமீஸ் என்பவர், என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று ஆஜர்படுத்தப் பட்டார். அவரை, ஏழு நாட்கள், என்.ஐ.ஏ., காவலில் விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதற்கிடையே, கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலரும், தகவல் தொழில்நுட்பத்துறை செயலராக பதவி வகித்து வந்த, சிவசங்கரனுக்கு, கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அவரிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள், ஏற்கனவே இரண்டு முறை விசாரணை நடத்தினர். நேற்று காலை, மீண்டும் ஆஜரான சிவசங்கரனிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X