பொது செய்தி

தமிழ்நாடு

'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில் கடம்பு உட்பட, 432 மரக்கன்று நடவு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில் கடம்பு உட்பட, 432 மரக்கன்று நடவு

திருப்பூர்:வஞ்சிபாளையம் அருகே நடந்த 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட நிகழ்ச்சியில், கடம்பு, நீர்மருது உட்பட, 432 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் ஆறாவது நிகழ்ச்சி, தென்மேற்கு பருவமழையின் இடையே நடந்து கொண்டிருக்கிறது. தரிசாக கிடக்கும் நிலங்களில், பசுமை மூடாக்கை ஏற்படுத்தும் வகையில், மரக்கன்றுகள் நடப்படுகின்றன.திருப்பூர், மங்கலம் ரோடு, வஞ்சிபாளையத்தில் சக்திவேல் என்பருக்கு சொந்தமான நிலத்தில், நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன. உரிமையாளர் குடும்பத்தினர் மணியம், பாலாமணி, பிரகாஷ், சாவித்திரி, சக்திவேல், கல்பனா, தருண், தக்சகா, நண்பர் குழு அறக்கட்டளை ஈஸ்வரமூர்த்தி, மகேஷ்குமார், வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் மரக்கன்றுகளை நட்டனர்.நீர்மருது, கடம்பு, கொடுக்காப்புளி, மலைவேம்பு, புங்கன், பூவரசு, தேக்கு உள்ளிட்ட, 432 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நடவு செய்ய விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் அழைப்புவிடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X