வடிகால் வசதி இல்லையா? உறிஞ்சு குழி அமைக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடிகால் வசதி இல்லையா? உறிஞ்சு குழி அமைக்கலாம்

Added : ஜூலை 28, 2020
Share

திருப்பூர்:வடிகால் வசதியில்லாத வீடுகளில், நுாறு நாள் திட்டத்தின் மூலம், இலவசமாக உறிஞ்சு குழி அமைத்துக்கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.வடிகால் வசதியில்லாத வீடுகளில், பாத்திரம்கழுவும் தண்ணீர், துணி சலவை செய்யும் தண்ணீர் மற்றும் மழைநீரை, நிலத்தடி நீராக சேமிக்க, இலவசமாக உறிஞ்சு குழி அமைத்து கொடுக்கின்றனர். இத்திட்டத்தில், 9,300 ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்படுகின்றன.முதல்கட்டமாக, ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள, தண்ணீர் தொட்டிகள், குடிநீர் குழாய்கள் அருகே, உறிஞ்சு குழி அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து, வடிகால் வசதியில்லாத வீடுகளிலும், இலவசமாக உறிஞ்சு குழி அமைத்து கொடுக்கப்படுகிறது.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜிடம் கேட்டபோது,'' வீணாகும் தண்ணீரை, நிலத்தடி நீராக சேகரிக்கும் வகையில், உறிஞ்சு குழி அமைக்கப்படுகிறது.வடிகால் வசதியில்லாத வீடுகளில், சொந்த இடம் இருந்தால், நுாறு நாள் திட்டத்தில், இலவசமாக உறிஞ்சு குழி அமைத்துக்கொள்ளலாம்.இதன்மூலம், வழிந்தோடும் மழைநீரையும் சேகரிக்க முடியும். இத்திட்டத்தில் உறிஞ்சு குழி அமைக்க விரும்புபவர், ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X