துணிகளை துவைக்கிறேன்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 துணிகளை துவைக்கிறேன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் துணிகளை, அடுத்தவர்கள் துவைக்க கூடாது. அதனால், என் துணிகளை நானே துவைத்துக் கொள்கிறேன். இதனால், என் கை விரல்களை மடக்கி அமுக்க முடிகிறது. நம்மால் முடிந்த வேலைகளை, நாமே செய்து கொள்ள வேண்டும் என்பதை, கொரோனா எனக்கு உணர்த்தி உள்ளது.
- சிவராஜ் சிங் சவுகான் , மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,
சட்டம் - ஒழுங்கு இல்லை
ஜார்க்கண்டில், சட்டம் - ஒழுங்கு காணாமல் போய்விட்டது, மாநிலத்தில் நக்சலிசம் மீண்டும் தலை துாக்க ஆரம்பித்து விட்டது. பட்டப்பகலிலேயே, கொலை, கொள்ளை, பலாத்காரம் ஆகியவை சர்வசாதாரணமாக நடக்கின்றன. லஞ்சமும், ஊழலும் தொழிலாகவே மாறிவிட்டன.
- ஜே.பி.நட்டா , தேசிய தலைவர், பா.ஜ..
பதவி பிரமாணத்துக்கு எதிரானது
மோடி பிரதமராக பதவியேற்ற போது, நம் அரசியல் சட்டத்தின் அடிப்படையான மதச்சார்பின்மையை பாதுகாப்பேன் என, உறுதி ஏற்றார். ஆனால், அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில், பிரதமராக மோடி பங்கேற்பது, ஏற்றுக் கொண்ட பதவி பிரமாணத்துக்கு எதிரானது.
- அசாதுதீன் ஓவைசி , தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X