அரசியல் செய்தி

தமிழ்நாடு

2,368 கோடி ரூபாயில் தொழில் திட்டங்களுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 2,368 கோடி ரூபாயில் தொழில் திட்டங்களுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல்

சென்னை : தமிழகத்தில், 2,368 கோடி ரூபாயில், புதிதாக நிறுவப்பட உள்ள, எட்டு நிறுவனங்களின், தொழில் திட்டங்களுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டினார்.

அத்துடன், 3,185 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள, 11 தொழில் நிறுவனங்களின், வணிக உற்பத்தியை துவக்கி வைத்தார்.'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, முதல்வர் அடிக்கல் நாட்டிய திட்டங்கள்:l செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில், 1,500 கோடி ரூபாயில், 23 ஆயிரம் பேருக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும், 'கேப்பிட்டல் லேண்ட்' நிறுவனத்தின், தகவல் தொழில்நுட்ப பூங்காl கடலுார் மாவட்டம், சிப்காட் தொழில் பூங்காவில், 350 கோடி ரூபாயில், 300 பேருக்கு, வேலை அளிக்கும், 'டாடா கெமிக்கல்ஸ்' நிறுவனத்தின், 'சிலிக்கா' உற்பத்திl திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள, 'மஹிந்திரா ஆரிஜின்ஸ்' தொழில் பூங்காவில், 105 கோடி ரூபாயில், 160 பேருக்கு வேலை அளிக்கும், ஜப்பான் நாட்டின், 'நிஸ்ஸாய் எலக்ட்ரிக்' நிறுவனத்தின், மின்சார மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி l பொன்னேரியில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 100 பேருக்கு வேலை அளிக்கும், ஜப்பான் நாட்டின், 'உசுய் சுசிரா' நிறுவனத்தின், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி l செங்கல்பட்டு மாவட்டம், 'மகிந்திரா வேர்ல்டு சிட்டி' தொழில் பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 100 பேருக்கு வேலை அளிக்கும், 'டினெக்ஸ்' நிறுவனத்தின், டீசல் இன்ஜின்களுக்கான பாகங்கள் உற்பத்தி l காஞ்சிபுரம் மாவட்டத்தில், 150 கோடி ரூபாயில், 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், 'ஸ்டீல் சாப்பி' நிறுவனத்தின், வாகன தொழிற்சாலைகளுக்கான, எக்கு பாகங்கள் உற்பத்தி l கடலுார் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில், 47 கோடி ரூபாய் முதலீட்டில், 550 பேருக்கு வேலை அளிக்கும், 'எம்.ஆர்.சி., மில்ஸ்' நிறுவனத்தின், 'டெக்ஸ்டைல்ஸ் பிராசசிங்' திட்டம்l விழுப்புரம் மாவட்டம், கம்பூர் கிராமத்தில், 16 கோடி ரூபாய் முதலீட்டில், 160 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 'ஸ்ரீராஜராஜேஸ்வரி லைப் கேர்' நிறுவனத்தின், மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் உற்பத்தி திட்டம்.

இந்நிறுவனம், கொரோனா நிவாரண மருந்து பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட உள்ளது. இவற்றுடன், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள, வானுார்தி தொழில் பூங்காவில், 'டிட்கோ' மற்றும் 'டைடல்' நிறுவனங்களின் கூட்டு முயற்சியால், 250 கோடி ரூபாய் முதலீட்டில் அமைய உள்ள, வானுார்தி உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு தேவையான, உயர் கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்புக்கான, உயர் தொழில்நுட்ப மையத்திற்கு, முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

முதல்வர் துவக்கி வைத்த திட்டங்கள்:l காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'கேப்பிட்டல் லேண்ட்' தொழில் பூங்காவில், 730 கோடி ரூபாய் முதலீட்டில், 875 பேருக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும், அமெரிக்காவை சேர்ந்த, 'டி.பி.ஐ., கம்போசிட்ஸ்' நிறுவனத்தின், காற்றாலை பிளேடு உற்பத்தி l காஞ்சிபுரம் மாவட்டத்தில், 608 கோடி ரூபாய் முதலீட்டில், 250 பேருக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும், 'குளோவிஸ் ஹூண்டாய்' நிறுவனத்தின், வாகன உதிரிபாகங்கள் பின்னல் மற்றும் 'பேக்கேஜிங்' திட்டம்l ஸ்ரீபெரும்புதுாரில், 500 கோடி ரூபாய் முதலீட்டில், 2,000 பேருக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும், ஜப்பான் நாட்டின், 'சொஜிட்ஸ் மதர்சன்' நிறுவனத்தின் தொழில் பூங்கா l விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில், 350 கோடி ரூபாயில், 625 பேருக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும், 'ராஜபாளையம் மில்ஸ்' நிறுவனத்தின், 'டெக்ஸ்டைல் பேப்ரிக்ஸ்' உற்பத்தி திட்டம். இத்திட்டத்திற்கு, 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, தற்போது உற்பத்தி துவக்கப்பட்டுள்ளதுl திருவள்ளூர் மாவட்டத்தில், 220 கோடி ரூபாயில், 300 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும், 'கல்ப் ஆயில்' நிறுவனத்தின், மசகு எண்ணெய் உற்பத்தி l காஞ்சிபுரம் மாவட்டத்தில், 80 கோடி ரூபாய் முதலீட்டில், 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், 'ஜெமாடாடீ' நிறுவனத்தின் கிடங்கு திட்டம்l செங்கல்பட்டு மாவட்டத்தில், 75 கோடி ரூபாயில், 300 பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும், 'ஹிப்ரோ ஹெல்த்கேர்' நிறுவனத்தின், மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் உற்பத்தி l செங்கல்பட்டு மாவட்டம், சிப்காட் சிறுசேரி தொழில்நுட்ப பூங்காவில், 24 கோடி ரூபாயில், 330 பேருக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும், டி.சி.எஸ்., நிறுவனத்தின், தகவல் தொழில்நுட்ப சேவைகள் l நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், 451 கோடி ரூபாய் முதலீட்டில், 1,150 பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும், 'மோதி ஸ் பின்னர்ஸ் லக்கி யார்ன் டெக்ஸ்' மற்றும் 'லக்கி வீவர்ஸ்' நிறுவனங்களின், நுால்கள் மற்றும் ஆடைகள் உற்பத்தி l திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 'இன்டோ ஸ்பேஸ்' தொழில் பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 75 பேருக்கு, வேலைவாய்ப்பளிக்கும், 'மஹிந்திரா ஸ்டீல் சர்வீசஸ்' நிறுவனத்தின், வாகன தொழிற்சாலைகளுக்கான, எக்கு பாகங்கள் உற்பத்தி l காஞ்சிபுரம் மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், 47 கோடி ரூபாயில், 950 பேருக்கு, வேலைவாய்ப்பளிக்கும், 'டீமேஜ் பில்டர்ஸ்' நிறுவனத்தின், கட்டுமானப் பொருட்கள் உற்பத்தி. இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலர் சண்முகம், தொழில் துறை செயலர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

உலக முதலீட்டாளர் மாநாடு திட்டங்கள்முதல்வர் அடிக்கல் நாட்டிய, எட்டு திட்டங்களில், ஆறு திட்டங்கள், 2019 ஜனவரியில் நடந்த, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டவை.வணிக உற்பத்தி துவக்கி வைக்கப்பட்ட, 11 திட்டங்களில், இரண்டு திட்டங்கள், 2015ல் நடந்த, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும், எட்டு திட்டங்கள், 2019 ஜனவரியில் நடந்த, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டவை.கடந்த, 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், மூன்று லட்சத்து, 501 கோடி ரூபாய் முதலீட்டில், 10.50 லட்சம் பேருக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதில், இதுவரை, 81 திட்டங்கள், வணிக உற்பத்தியை துவக்கி உள்ளன. இது, 26.64 சதவீதமாகும். மேலும், 191 திட்டங்கள், பல்வேறு நிலைகளில் உள்ளன. இது, 62.82 சதவீதமாகும்.கடந்த, 2015ல் நடந்த, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 4.70 லட்சம் பேருக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதில், 44 திட்டங்கள், வணிக உற்பத்தியை துவக்கி உள்ளன. 27 திட்டங்கள், பல்வேறு நிலைகளில் உள்ளன. இது, மொத்த திட்டங்களில், 72 சதவீதமாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X