சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

என் வளர்ச்சிக்கு காரணம் பழநி முருகன்!

Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 என் வளர்ச்சிக்கு காரணம் பழநி முருகன்!

முருக பெருமானின், கந்த சஷ்டி கவசம் குறித்த சர்ச்சையை சிலர் கிளப்பிஉள்ள நிலையில், அவன் புகழ் பாடும், பழம்பெரும் நடிகை, கே.ஆர்.விஜயா: சிறு வயதில், கேரள மாநிலம் திருச்சூரில் நாங்கள் வசித்தோம். அதன்பின், திருச்சூரிலும், தமிழகத்தில் உள்ள பழநியிலுமாக, குடும்பத்துடன் மாறி மாறி வாழ்ந்து வந்தோம். அதன்பின், பழநிக்கே நிரந்தரமாக வந்து விட்டோம்.

பழநி முருகன் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். கோவிலுக்கு பக்கத்திலேயே எங்கள் வீடு இருந்தது. எனக்கு எப்போதெல்லாம் முருகனை பார்க்க வேண்டும் என தோன்றுகிறதோ, உடனே, அப்பா, அம்மாவிடம் சொல்லி விட்டு, 'திபுதிபு'வென, அத்தனை படிகளையும் ஏறி, பழநியாண்டவனை தரிசித்து திரும்பி விடுவேன். சிறு வயது என்பதால், அப்போது எனக்கு எளிதாக இருந்தது.

இப்போது, பழநிக்கு சென்று வருவோர், மலை மேல் இருக்கும் ஆண்டவனை மட்டும் தரிசித்து விட்டு, திரும்பி விடுகின்றனர். திருவாவினன்குடி முருகன் கோவில், அடிவாரத்தில் தான் இருக்கிறது என்பது, நிறைய பேருக்கு தெரியாது. பழநி முருகனை தரிசிக்க செல்வோர், மலைக்கு போகும் முன், அடிவாரத்தில் இருக்கும் திருவாவினன் கோவிலுக்கும் சென்று, முருகனை தரிசித்து, பின் தான் மலையேற வேண்டும்.

திருவாவினன் கோவிலின் ஒவ்வொரு துாணுக்கும் என்னைத் தெரியும். அத்தனை முறை, அந்த கோவிலை சுற்றி வந்துள்ளேன். அந்த வயதில், கோவிலுக்கு சென்று, முருகனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருக்கும்; வேறு எண்ணம், வேண்டுதல் எதுவும் இருக்காது.எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், சின்னஞ்சிறு பெண்ணாக, அந்த முருகனை நான், பல முறை தரிசித்து வந்ததால், அவன் எனக்கு எண்ணற்ற வசதிகளையும், வாய்ப்புகளையும் வழங்கி, அருள் செய்து உள்ளான்.

எங்கப்பா நடத்தி வந்த நாடக குழுவில், சிறிய பாத்திரங்களில் நான் நடித்து வந்தேன். சென்னையில் எங்கள் குழு முகாமிட்டிருந்த போது, ஜெமினி கணேசன், என் நாடகத்திற்கு தலைமை வகித்தார். அப்போது அவர், ஜெமினி நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்தார்.'இந்த பெண், பெரிய நடிகையாக வருவார்' என, என் நடிப்பை பார்த்து கூறினார். அவர் சொன்னது, இரண்டு ஆண்டுகள் கழித்து பலித்தது. அவருடன் தான், என் முதல் படம், கற்பகம் நடித்தேன்.

எனக்கு முன், எங்கள் குடும்பத்தில் யாரும் சினிமாவில் நடித்ததில்லை. நான் தான், எங்கள் குடும்பத்தில் முதல் முதலாக, சினிமாவில் நடிக்க வந்தது. நான் இந்த அளவுக்கு உயர்ந்து, பிரபல நடிகையாக மாறி, மக்கள் மனதில் குடியிருக்க காரணம், அந்த பழநி மலை முருகன் தான். அதை இப்போதும், அந்த ஆண்டவன் சன்னிதி முன் நிற்கும் போது உணர்கிறேன்!

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சத்துரு, பெங்களூர் தங்கள் அன்பான வார்த்தைகள் மனதை வருடச் செய்கின்றன.
Rate this:
Cancel
thulakol - coimbatore,இந்தியா
29-ஜூலை-202018:35:58 IST Report Abuse
thulakol வணக்கம் அம்மா நல்ல பதிவு
Rate this:
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
29-ஜூலை-202016:38:32 IST Report Abuse
Rajalakshmi ஆமாம். உண்மைதான். எனக்கும் தெரியும் திருமதி.கே.ஆர்.விஜயா பழனி முருகனின் பக்தை அங்குதான் வளர்ந்தார். அதனாலேயே எனக்கு இவர் மேல் தனி மரியாதை உண்டு. பழனி முருகனே கேரளத்து பக்தர்களை காக்க இருக்கிறான் என்று காஞ்சி பரமாச்சாரியார் சொல்லியும் படித்திருக்கிறேன்.அம்மனாக கே.ஆர்.விஜயாவை உடனே ஏற்றுக்கொள்ள முடியும். சமீபத்தில் ''நம்ம வீட்டு தெய்வம்'' பார்த்தேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X