சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரசவித்த தாய்க்கு கொரோனா பாதிப்பு: டாக்டருக்கு தொற்று இல்லை

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

திருப்பூர்:குழந்தை பிரசவித்த தாய்க்கு கொரோனா உறுதியானதால், சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எவருக்கும் தொற்று உறுதியாகவில்லை.தாராபுரம் அருகே குள்ளாயிபாளையத்தை சேர்ந்த 30 வயது கர்ப்பிணி, பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொளளப்பட்டது.முடிவு தெரிவதற்கு முன், பிரசவ வலி ஏற்படவே, அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
குழந்தை பிறப்புக்கு பின், வீடு திரும்பினார். அதன்பின்னரே, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால், தனியார் மருத்துவமனை மூடப்பட்டது. பிரசவித்த தாய், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.நகராட்சி சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'சிகிச்சையில் ஈடுபட்ட டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், சளி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். எவருக்கும் தொற்று இல்லை. இருப்பினும், மருத்துவமனை மூன்று நாட்கள் மூடப்பட்டு, கிருமிநாசினி தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X