பொது செய்தி

தமிழ்நாடு

'சரக்கு' வாகனத்தில் பயணம் அத்துமீறல் தடுக்கப்படுமா?

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

ஆனைமலை:ஆனைமலை, கோட்டூர் சுற்றுப்பகுதிகளில், சரக்கு வாகனங்களில் சமூக விலகல் இன்றி மக்களை அழைத்து செல்வதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள், நுால் மில்கள் உள்ளன. தொழிற்சாலைகளுக்கு தினமும் கிராமங்களில் இருந்து, ஏராளமான வேலையாட்கள் சரக்கு வாகனங்களில் அழைத்து செல்லப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால், மக்கள் பலரும் ஆட்டோ, கார், சரக்கு வாகனங்களில் பயணம் செய்கின்றனர்.இந்நிலையில், ஆட்டோ, கார் ஓட்டுனர்கள் அரசு அனுமதித்ததை விட அதிக அளவு பயணிகளை வாகனத்தில் அழைத்துச் செல்கின்றனர். சரக்கு வாகனங்களில் ஆட்களை நெருக்கமாக அமரவைத்து அழைத்துச் செல்கின்றனர்.இதனால், கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும், சரக்கு வாகனத்தில் விதிகளை மீறி மக்களை அழைத்து செல்கின்றனர். வட்டார போக்குவரத்து துறை மற்றும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். முக்கிய இடங்களில், தினமும் காலை, மாலை நேரங்களில், வாகன சோதனை செய்து அபராதம் விதித்தால், அத்துமீறல் தடுக்கப்படும். கொரோனா பரவலை எளிதாக கட்டுப்படுத்த முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X