பிரஸ் ஸ்டிக்கர் பயன்படுத்த கட்டுப்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பிரஸ் ஸ்டிக்கர்' பயன்படுத்த கட்டுப்பாடு

Added : ஜூலை 28, 2020
Share
வால்பாறை:கோவை மாவட்ட எஸ்.பி., அருளரசு, வால்பாறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட, காடம்பாறை, வால்பாறை, முடீஸ், ேஷக்கல்முடி ஆகிய ஸ்டேஷன்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, போலீஸ் ஸ்டேஷனில் உள்ள வழக்குகள் குறித்து, நிலுவை வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார். எஸ்.பி., அருளரசு நிருபர்களிடம் பேசும் போது, ''வால்பாறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் போலீசார் சிறப்பாக பணிபுரிந்து

வால்பாறை:கோவை மாவட்ட எஸ்.பி., அருளரசு, வால்பாறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட, காடம்பாறை, வால்பாறை, முடீஸ், ேஷக்கல்முடி ஆகிய ஸ்டேஷன்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, போலீஸ் ஸ்டேஷனில் உள்ள வழக்குகள் குறித்து, நிலுவை வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார். எஸ்.பி., அருளரசு நிருபர்களிடம் பேசும் போது, ''வால்பாறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் போலீசார் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் அனுமதியின்றி, வாகனங்களில் 'பிரஸ் ஸ்டிக்கர்' ஒட்டக்கூடாது. இதை உள்ளூர் போலீசார் கண்காணிக்க வேண்டும்,'' என்றார்.வால்பாறை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X