பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டில் வீசப்பட்ட தக்காளி விலை குறைந்தது காரணமா?

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

பல்லடம்:பல்லடம் வட்டாரத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், தக்காளிகள் ரோட்டில் வீசப்பட்டுள்ளன.ஊரடங்கு காரணமாகவும், உள்ளூரில் உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், தக்காளி விலை குறைந்துள்ளது. இச்சூழலில், பல்லடம் வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில், தக்காளிகள் ரோட்டில் வீசப்பட்டுள்ளன.விவசாயிகள் கூறியதாவது:கோடையில், வெயிலின் தாக்கம் காரணமாக, விவசாயிகள் பெரும்பாலும் தக்காளி சாகுபடி செய்யவில்லை. இருந்தும், கர்நாடகாவில் இருந்து தக்காளி தருவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன.இதனால், விலை கிலோ, 50 -- 60 ரூபாயாக இருந்தது. தற்போது, பருவமழை துவங்கியுள்ளதால், விவசாயிகள், முன்கூட்டியே தக்காளி நடவு செய்திருந்தனர். உள்ளூரில் உற்பத்தி அதிகரித்துள்ளதால், கிலோ, 25 -- 30 ரூபாயாக குறைந்துள்ளது.இதனால், விலை கிடைக்காமல் வியாபாரிகள் இதுபோன்று தக்காளிகளை வீசி செல்வர். ஆனால், ஓரளவுக்கு கட்டுப்படியாகும் விலை இருந்தும், எதற்காக ரோட்டில் வீசினார்கள் என்று தெரியவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X