பொது செய்தி

தமிழ்நாடு

என் பின்னணியில் எந்த கட்சியும் இல்லை: நடிகை விஜயலட்சுமி

Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : ''எனக்கு பின்னால் எந்த கட்சியும் இல்லை. உடல்நிலை முழுமையாக சரியாகாத நிலையில், வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி விட்டனர்,'' என, நடிகை விஜயலட்சுமி கூறினார்.

சீமான் மீது குற்றம்சாட்டி, தற்கொலைக்கு முயன்று, வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அவரது புகார் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி, நேற்று அளித்த பேட்டி:நான் சாப்பிட்டு இரண்டு நாட்களாகி விட்டது. எனக்கு தெரியாமலேயே, என்னை வலுக்கட்டாயமாக, மருத்துவமனையில் இருந்து வெளியேற்றியுள்ளனர். சரியான சிகிச்சை அளிக்க விடாமல் தடுக்கின்றனர். சீமான் போன்றோர், என்னை தவறான பெண்ணாகவே சித்தரிக்கின்றனர். சீமான், ஹரிநாடார் மீது, இதுவரை நடவடிக்கை இல்லை.

இதையடுத்து, என்ன செய்வது என்று தெரியவில்லை. தேவைப்பட்டால் உண்ணாவிரதம் இருப்பேன். என் வழக்கை, முழுவதுமாக வெளியே வர விடாமல் தடுக்கின்றனர்.என் தோழி காயத்ரி ரகுராம் தான், பணம் கொடுத்து சிகிச்சைக்கு உதவினார். ஆரம்பத்தில் என்னுடன் இருந்த அவர், இப்போது இல்லை. எனக்குப் பின், பா.ஜ., இருப்பதாக கூறுகின்றனர். என் பின்னணியில் எந்த கட்சியும் இல்லை; மக்கள் தான் இருக்கின்றனர்.மூச்சு விட சிரம மான நிலையில் இருந்தும், மருத்துவமனையில் இருந்து வெளியேற்றியுள்ளனர். இவர்களுக்கு ஒரு உயிரின் அருமை தெரியவில்லை. என் உயிருக்கு யார் பொறுப்பு?சமூக ஊடகத்திலும் என்னை வரவிடாமல் தடுக்கின்றனர்.

நான் எந்த நாடகத்தையும் நடத்தவில்லை. எனக்கு ஊடகங்கள் ஆதரவாக இருக்க வேண்டும். என்னை பற்றி அவதுாறு பேச வேண்டாம் என்று தான், நான் சொல்லி வருகிறேன். பேசாமல் இருந்து விட்டால், செய்த தப்பில் இருந்து தப்பி விடலாம் என, சீமான் நினைக்கிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
29-ஜூலை-202015:13:26 IST Report Abuse
s.rajagopalan திரையுலகில் ராவணன் , துச்சாதனன், போன்றோர்தான் ஆட்சி செய்கிறார்கள்..ஏக பத்னி விரதனான ராம பிரானெல்லாம் அங்கு கிடையாது. அந்த மாதிரி உள்ள இடத்தில் நீ மாட்டிக்கொண்டு இப்போ அழுது என்ன பயன் ? சீமான் எப்படி பேசுவார், செய்வார் என்பதெல்லாம் ஊரறிந்த விஷயம். அரசியல் செல்வாக்கு உள்ள அவரை நீ சமாளிக்க முடியாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X